ஆளவந்தான் கமல், பிகே அமீர்கானையே அடிச்சி தூக்கிட்டாரே.. நிர்வாணமாக போஸ் கொடுத்த விஜயதேவரகொண்டா!

சென்னை: இந்திய சினிமாவில் நடிகைகள் படு கவர்ச்சியாகவும், அரை நிர்வாணமாகவும் பல படங்களில் நடித்து இணையத்தின் சூட்டை ஏற்றி உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை போட்டும் அதே வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனால், ஆண் நடிகர்கள் பெரும்பாலும் கோட்சூட் அதை விட்டால் வேட்டி சடையில் தான் அதிகம் வலம் வருவார்கள்.

இந்நிலையில், முற்றும் துறந்து ஆடையேதும் அணியாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து விஜய் தேவரகொண்டா ஒட்டுமொத்த ரசிகைகளுக்கும் கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

லேட்டஸ்ட் விஜய்

லேட்டஸ்ட் விஜய்

இந்திய சினிமாவில் விஜய் என ஆரம்பிக்கும் பெயரில் ஏகப்பட்ட நடிகர்கள் உள்ளனர். கோலிவுட்டில் விஜயகாந்த், விஜய், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் இந்த பெயரில் வலம் வருகின்றனர். டோலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அனைத்து இந்திய ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த லேட்டஸ்ட் விஜயாக விஜய் தேவரகொண்டா சினிமா உலகை சமீப காலமாக கலக்கி வருகிறார். டோலிவுட் மற்றும் பாலிவுட் கூட்டணியில் உருவாகி உள்ள அவரது புதிய படமான லைகர் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

லைகர்

லைகர்

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ள லைகர் படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், டோலிவுட் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி உள்ளிட்டோர் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

நிர்வாணமாக நின்று

நிர்வாணமாக நின்று

ஏற்கனவே சிங்கமும் புலியும் கலந்த சாலா கிராஸ் ப்ரீட் என ஏகப்பட்ட வெறித்தனமான போஸ்டர்கள் எல்லாம் வெளியான நிலையில், தற்போது படத்தை புரமோட் செய்யும் விதமாக வெளியாகி உள்ள புதிய போஸ்டர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் முழு நிர்வாணமாக கையில் ஒரே ஒரு ரோஜா பூங்கொத்தை வைத்து அந்த இடத்தை மட்டுமே மறைத்தப்படி நிற்கிறார்.

செக்ஸியஸ்ட் போஸ்டர் எவர்

செக்ஸியஸ்ட் போஸ்டர் எவர்


இந்த போஸ்டரை பார்த்த வுடனே ரசிகர்கள் #SexiestPosterEver என்ற ஹாஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். பெண் ரசிகைகளின் கமெண்ட் தான் சோஷியல் மீடியாவையே ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்து வருகிறது. இதுவரை நடிகைகள் போட்ட போட்டோக்கள் எல்லாம் இதற்கு முன்பாக ஒன்றுமே இல்லை என்றும், விஜய் தேவரகொண்டாவின் சிக்ஸ்பேக் உடம்பை பாருங்க என்றும், அந்த ரோஜாக்கள் உதிர்ந்து விழக் கூடாதா என்றும் ஆபாச கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஆளவந்தான்

ஆளவந்தான்

ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன் நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் சர்ச்சையை அப்போதைய காலக்கட்டத்தில் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகரும் அது போன்ற முயற்சிகளை எடுத்து நடிக்கவில்லை. மிஷ்கினின் சைக்கோ படத்தில் வில்லன் நிர்வாணமாக நடித்திருக்கும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

பிகே

பிகே

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்த பிகே படத்தில் ஏலியனான அமீர்கான் ஆடை ஏதும் இல்லாமல் இந்தியாவுக்கு பறக்கும் தட்டு மூலமாக வந்து இறங்குவார். அவரை காட்டும் காட்சியில் ஒருவரிடம் தனது விலையுயர்ந்த டிவைஸை கொடுத்து விட்டு அவரது டேப் ரெக்கார்டரை வாங்கிக் கொண்டு அதை மறைத்தப்படி தண்டவாளத்தில் நிற்கும் காட்சி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் இந்த காட்சிக்கு எதிர்ப்புகள் குவியுமா? அல்லது வரவேற்பு கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X