இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்: வைரல் புகைப்படங்கள்
Recommended Video

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கீத கோவிந்தம் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். அவர் நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் விஜய்யின் சில புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய்
இளம் பெண் ஒருவருடன் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. புகைப்படங்களை பார்த்தவர்கள் யார் இந்த பெண், விஜய்க்கு அவ்வளவு பழக்கமா என்று வியக்கிறார்கள். விஜய்யும் சிரித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இல்லை இல்லை
விஜய், இளம்பெண் இருக்கும் புகைப்படங்கள் போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்டது என்று சிலர் தெரிவித்துள்ளனர். புகைப்படங்களை பார்த்தால் போட்டோஷூட் போன்று தெரியவில்லை. நிஜத்தில் எடுத்தது போன்று இருக்கே. யாருண்ணா அந்த பொண்ணு என்று கேள்வி எழுப்பியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

விம்மி
விஜய் தேவரகொண்டா விம்மி என்ற வெளிநாட்டவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் என்றும் முன்பு கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து அறிந்த விஜய்யோ, செம காமெடி என்று கூறி சிரித்தார். இந்நிலையில் தான் இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நோட்டா
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்து வரும் நோட்டா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா மீது தெலுங்கு எழுத்தாளர் ஷஷாங்க் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு பதிப்புக்கு வசனம் எழுத ஷஷாங்க்கை ஒப்பந்தம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிமீறல்
விதிகளை மீறி தன்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக ஞானவேல்ராஜா மீது ஷஷாங்க் புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து நோட்டா படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ஷஷாங்க் புகார் அளித்துள்ளதால் படத்திற்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











