கபிர் சிங் பற்றி அர்ஜுன் ரெட்டி என்ன இப்படி சொல்லிட்டாரு?
பெங்களூர்: அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் குறித்து விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ள கருத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டனர்.
அந்த படம் இதுவரை ரூ. 260 கோடி வசூல் செய்துள்ளது. அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டி தான் கபிர் சிங்கையும் இயக்கினார்.

அர்ஜுன் ரெட்டி
கபிர் சிங் படம் வெற்றியடைய விஜய் தேவரகொண்டா வாழ்த்தினார். ஆனால் படம் ரிலீஸானபோது அவர் பிரான்சில் இருந்ததால் பார்க்க முடியவில்லை. நாடு திரும்பியதும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கபிர் சிங் படத்தை பார்க்கவில்லை. இந்நிலையில் டியர் காம்ரேட் படத்தை விளம்பரம் செய்ய பெங்களூருவுக்கு வந்த விஜய் தேவரகொண்டாவிடம் கபிர் சிங் படம் பார்த்தீர்களா என்று கேட்கப்பட்டது.

விஜய் தேவரகொண்டா
கபிர் சிங் படத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். அவர் அந்த கதாபாத்திரமாக சிறப்பாக நடித்துள்ளார். இது தவிர அந்த படத்தை பார்க்க ஒன்றும் இல்லை. எனக்கு கதை தெரியும், நான் அந்த கதையில் நடித்தேன். மீண்டும் என்னத்த பார்ப்பது என்று கபிர் சிங் படம் குறித்து விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

கோரிக்கை
கபிர் சிங் படத்தை பார்க்குமாறு இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார். சந்தீப் என் நண்பர் என்பதால் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் வெற்றி பெற விரும்பினேன். ஆனால் எதிர்பாராவிதமாக அந்த படம் பிளாக்பஸ்டராகிவிட்டது. இது குறித்து மேலும் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

ஹிட்
அர்ஜுன் ரெட்டியை விட கபிர் சிங் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் விஜய் தேவரகொண்டா பொறாமையில் அப்படி பேசியுள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் அர்ஜுன் ரெட்டி போன்று இல்லாமல் கபிர் சிங் சர்ச்சையில் சிக்கியது. மேலும் சந்தீப் வாங்காவின் பேட்டியாலும் பிரச்சனை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











