நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

By Siva

மும்பை: விஜய் தேவரகொண்டா கபிர் சிங் பட ஹீரோயினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் மிரட்டல் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை ஷாஹித் கபூர், கியாரா அத்வானியை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார்கள். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியே சந்தீப் வாங்கா ரெட்டியே கபிர் சிங்கையும் இயக்கினார்.

அர்ஜுன் ரெட்டி போன்ற படத்தை எல்லாம் ரீமேக் செய்யக் கூடாது என்றார்கள். இந்நிலையில் கபிர் சிங் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 9 நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளது.

கபிர் சிங் படத்தை பார்க்கும் அனைவரும் ஷாஹித் கபூரின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படம் ரிலீஸாவதற்கு முன்பு கபிர் சிங் குழுவுக்கு விஜய் தேவரகொண்டா வாழ்த்து தெரிவித்தார். இந்த படம் பிளாக்பஸ்டராகட்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்திய நேரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

Vijay Deverakonda sends flowers to Kiara Advani

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா கபிர் சிங் ஹீரோயின் கியாரா அத்வானிக்கு பூங்கொத்து மற்றும் உடையை பரிசாக அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவே தனக்கு பரிசு கொடுத்ததில் கியாராவுக்கு ஒரே குஷி. உடனே அந்த பரிசுகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கபிர் சிங் ரிலீஸானபோது விஜய் தேவரகொண்டா வெளிநாட்டில் இருந்தார். அங்கிருந்து நாடு திரும்பியதும் அவருக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. இதனால் அவரால் கபிர் சிங் படத்தை உடனே பார்க்க முடியவில்லை.

Vijay Deverakonda sends flowers to Kiara Advani

கபிர் சிங் வெற்றி பெற்றதை அடுத்து நானி நடிப்பில் வெளியான ஜெர்சியை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் தான் ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ஜெர்சி ரீமேக்கில் ஷாஹித் கபூர் தான் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஷாஹித் கபூருக்கு வெகுகாலம் கழித்து சூப்பர் டூப்பர் ஹிட் கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து, தம்மடித்து கஷ்டப்பட்டது எல்லாம் வீண் போகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X