புரட்சித் தமிழனையே வியக்க வைத்த 'விஜய்': குவிந்த பாராட்டு
சென்னை: தெலுங்கு ஹீரோவான விஜய் தேவரகொண்டா சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நேரடி தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் புதுப்படத்தில் நடிக்கிறார் விஜய்.

விஜய்
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கு நோட்டா என்று பெயர் வைத்துள்ளனர். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாதா நடிக்கிறார். நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமிழ்
தெலுங்குகாரராக இருந்தாலும் விஜய் தேவரகொண்டா 3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்துள்ளார். இதை பார்த்த சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

சபாஷ்
3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்த விஜய்யை அனைவரும் பாராட்டியுள்ளனர். விஜய் தேவரகொண்டாவை பாராட்டி ஆனந்த் சங்கர் ட்வீட்டியிருந்தார்.

தெலுங்கு ஹீரோ
தெலுங்கு ஹீரோக்கள் தமிழ் படத்தில் நடிப்பது புதிது அல்ல. ஆனால் விஜய் தேவரகொண்டா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் கோலிவுட் வந்துள்ள நேரத்தில் அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் த்ருவ் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











