தனுஷின் குபேரா.. முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகரா?.. மிஸ் பண்ணிட்டாரே

சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தெலுங்கு மொழியில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. தமிழில் ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் இருந்தாலும் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழில் பெரிய ஹிட்டடிக்காத குறையை சமீபத்தில்கூட இயக்குநர் சேகர் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தில் தனுஷுக்கு பதிலாக வேறு நடிகர் நடிக்கவிருந்தாராம்.

தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முல்லா. இவர் ஏற்கனவே இயக்கிய அனாமிகா, ஃபிடா உள்ளிட்ட ஏராளமான படங்கள் பெரிய வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தனுஷை வைத்து அவர் படம் இயக்கப்போவதாக வந்த அறிவிப்பை பார்த்து தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் ஏற்கனவே தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் இணைந்த வாத்தி படம் வாரிவிட்டதால் பயமும் கொண்டிருந்தனர்.

குபேரா: படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என அத்தனையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக பெருக்கியது. அதுமட்டுமின்றி தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் இறங்கியிருந்ததால் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் ரசிகர்கள். கடந்த மாதம் படமானது உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.

Vijay Deverakonda was originally supposed to star in Dhanush s Kuberaa
Photo Credit:

படம் திருப்தி: படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே முன்வைத்தார்கள். முக்கியமாக தனுஷின் நடிப்பு மெர்சல் செய்துவிட்டதாக மகிழ்ச்சியோடு கூறி; அவருக்கு இந்தப் படத்துக்கு தேசிய விருது உறுதிதான் என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது போல் படத்தில் தனுஷின் நடிப்பு அவ்வளவு எதார்த்தமாக் இருந்தது. தனது உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் என அத்தனையிலும் முழு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழில் டல்தான்: தமிழ்நாட்டில் தனுஷின் நடிப்பு கொண்டாடப்பட்டாலும்; படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் தெலுங்கில் குபேரா திரைப்படம் வசூல், விமர்சனம் என அனைத்திலுமே நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. தமிழ்நாட்டில் படம் நினைத்த அளவுக்கு ஹிட்டாகாத வருத்தத்தை இயக்குநர் சேகர் கம்முல்லாகூட சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி முதலில் இப்படத்தின் கதையை இயக்குநர் சென்று நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம்தான் சொன்னதாகவும்; விஜய்க்கு கதை பிடித்திருந்தாலும் பிச்சைக்காரராக நடிக்க தயங்கியதால் இதனை மிஸ் செய்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தால் தமிழில் மேற்கொண்டு படம் அடி வாங்கியிருக்கும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X