கன்னட படத்தை ரீமேக் செய்ய விஜய், தனுஷ் விருப்பம்
சென்னை: கன்னட படமான உக்ரமை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்யும் அதே படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறார்.
ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடிப்பில் கடந்த 21ம் தேதி வெளியான கன்னட படம் உக்ரம். இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரம் படத்தை ரீமேக் செய்ய கோலிவுட், டோலிவுட் நடிகர்கள் விரும்புகிறார்கள்.

தனுஷ்
உக்ரம் படத்தை பார்த்த தனுஷுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. இதைடுத்து அவர் அந்த படத்தை தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

விஜய்
முருகதாஸ் படத்தில் நடித்து வரும் விஜய்யும் உக்ரம் படத்தை பார்த்துள்ளார். உடனே அவர் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கில்
உக்ரம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இடையே கடும் மோதல் நடந்துவருவதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

உக்ரம்
முருகதாஸ் படத்தை அடுத்து விஜய் சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு உக்ரம் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறார் என்று பேசப்படுகிறது.

தமிழிலும்?
விஜய், தனுஷ் ஆகிய இருவரில் யார் உக்ரமை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளதால் அவர்களுக்கு இடையே இந்த விவகாரத்தில் மோதல் ஏற்படாது என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











