இப்படி நடக்குமென நான் நினைத்தே பார்க்கவில்லை.. எல்லோர் முன்னாடியும் விஜய் அம்மா ஓபன் டாக்

சென்னை: விஜய் இப்போது நடிகரிலிருந்து அரசியல் கட்சி தலைவர் என்ற இடத்துக்கு நகர்ந்துவிட்டார். கட்சி ஆரம்பித்து திமுகவை காட்டமாக எதிர்த்துவரும் அவர்; சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தும் களமிறங்கியிருந்தார். இதற்கிடையே அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென சங்கீதா தாக்கல் செய்த மனு ஜூன் 15ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் கண்டிப்பாக அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துவிடும் என பலரால் கருதப்படுகிறது.

அரசியல் கட்சியை தொடங்கி ஒரு தேர்தலையும் சந்தித்துவிட்டார் விஜய். களத்துக்கு வந்ததிலிருந்தே அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் முளைத்தன. கரூர் துயர சம்பவத்திலேயே அவரது இமேஜில் கொஞ்சம் கீறல் விழுந்தது. அடுத்ததாக ஒட்டுமொத்தமாக அவரது இமேஜ் டேமேஜ் ஆனது என்றால் சங்கீதா விஷயத்தில்தான். விஜய்யின் மனைவி தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு சாதாரணமாக கடந்து போகும்படி இருக்கவில்லை. ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அத்தனை பேரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டார்.

Vijay Divorce Case Hearing on June 15 Sangeetha Petition Election Impact Shoba Speech Goes Viral
Photo Credit:

தேர்தலில் எதிரொலிக்குமா?: சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுவாலும், அவர் வைத்த குற்றச்சாட்டு காரணமாகவும் தேர்தல் களத்தில் விஜய்க்கு எந்த மாதிரியான பின்னடைவு ஏற்பட்டிருக்குமோ என அவரது தொண்டர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது வென்றிட வேண்டும்; தளபதி விஜய் இரண்டு தொகுதிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள். அவர்களது ஆசை நிறைவேறுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஜூன் 15ல் விசாரணை: சங்கீதாவின் விவாகரத்து மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் ஆஜராகவில்லை. அதன் காரணமாக ஜூன் 15ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி. அன்றைய தினம் காணொலி மூலம் ஆஜராக அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விஜய் தரப்பு வைத்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து பேசி பிரிவதாக முடிவெடுத்துவிட்டார்கள் என எஸ்.ஏ.சி கூறியிருக்கிறார். எனவே ஜூன் மாதம் சட்டப்பூர்வமான விவாகரத்து கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபுல் சப்போர்ட்டில் தாய், தந்தை: விஜய்யின் தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை பொறுத்தவரை தங்களது மகனுக்கு முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார்கள். இவ்விஷயத்தில் எஸ்.ஏ.சி சங்கீதா பக்கம் ஸ்டாண்ட் எடுப்பார் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால் அவரோ தேர்தலுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிவிட்டார். மேலும், விஜய் பாணியில் திமுக மீதும் இந்த விஷயத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷோபா பேச்சு: இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார் விஜய்யின் அம்மா ஷோபா. அப்போது அவர் பேசுகையில், "விஜய் பிறந்ததிலிருந்தே எனக்கு நல்ல நேரம்தான். இவ்வளவு பீக்கிற்கு அவர் வருவார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. எல்லாம் கடவுளின் அருள்தான். எப்போதுமே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்வேன். இப்போது ஸ்பெஷலான இடத்தில் இருக்கிறார். அதற்கும் சேர்த்து ஸ்பெஷலான வாழ்த்து" என்றார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X