விஜய்யுடன் உறவில் இருந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்.. வெடிகுண்டை போட்ட சங்கீதா.. யார் அந்த நடிகை?

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்; சங்கீதாவை திருமணம் செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரம் தமிழ் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பரபரப்பை உண்டு செய்திருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறார்கள்.

நடிகர் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமணம் வாழ்க்கையில் சில வருடங்களாகவே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. எப்படியும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும் என்றுதான் இரண்டு பேரின் குடும்பத்தினரும் நினைத்தார்கள். மேலும், அவர்களை சேர்த்து வைப்பதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

Vijay Divorce Case Wife Sangeetha Mentions Actress in Petition Fans Speculate Who She Is
Photo Credit:

விவாகரத்து மனு தாக்கல்: ஆனால் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டதால் விஜய்யை பிரியும் முடிவுக்கு வந்திருக்கிறார் சங்கீதா. அதன்படி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார். அவரது இந்த முடிவு விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையிலும் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவர் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் மேற்கொண்டு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

சங்கீதா மனுவில்: அந்த மனுவில் அவர், 'விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அதனை நான் தட்டிக்கேட்டேன். எனவே அவர் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அதேபோல் எனக்கான நிதி ஆதாரத்தையும் தடுத்து கட்டுப்பாடுகள் விதித்தார். செலவுக்கு பணம் தரவில்லை. நடிகையுடனான உறவை கண்டிப்பாக முறித்துக்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

நடிகையே பகிர்ந்திருந்தார்: அதன் காரணமாக பெரிய மன உளைச்சலில் இருந்தேன். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார். அதனை நடிகையே பகிரவும் செய்திருந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காக அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும், எனது கணவருக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்குவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

யார் அந்த நடிகை?: இந்த விஷயங்களை கவனித்த ரசிகர்கள்; விஜய்யுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகை யாராக இருக்கும் என்று தேடலில் இறங்கிவிட்டார்கள். மேலும் நன்றாக இருந்த குடும்பத்தை இப்படி சிதைத்துவிட்டாரே என்றும் எமோஷனலாக கமெண்ட்ஸும் செய்து அந்த நடிகையை சோஷியல் மீடியாவில் விளாசிவருகிறார்கள். இன்னும் இந்த விவகாரங்களில் என்ன மாதிரியான குண்டுகள் விழப்போகின்றனவோ?.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X