சங்கீதாவை அட்டாக் செய்யாதீங்க.. நிலைமை கை மீறி போகுது..விஜய் இதை செய்ய சொல்றார்..களத்தில் பிஆர் டீம்

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தை வைத்து பலரும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் போடும்படி ஆடியோ ஒன்று லீக்காகி இருக்கிறது.

விஜய்யின் மனைவி சங்கீதா இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறார். செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த இரண்டு வருடங்களாக விஜய்யை பிரிந்து வாழ்கிறேன். எனவே விவாகரத்து வேண்டும். விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அதனை தட்டிக்கேட்டதால் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். மேலும் நிதி ஆதாரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதித்தார்.

மன உளைச்சலுக்கு ஆளானேன்: ஐந்து ஆண்டுகளாகவே விஜய் மனதளவில் என்னை பிரிந்து வாழ்ந்தார். ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் வாழ்ந்தோம். நடிகையுடன் அவர் உறவில் இருந்ததால் நான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானேன். நடிகையுடன் இருக்கும் உறவை முறித்துக்கொள்வதாக உறுதி கொடுத்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

Vijay Divorce Controversy Leaked Audio Sparks New Storm Amid Sangeetha s Petition
Photo Credit:

நடிகையின் செயல்: அந்த நடிகை விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் எனது குழந்தைகளுக்கும், குடும்பத்துக்கும் அவமானம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். அந்தப் புகைப்படங்களையும் நடிகையே பகிர்ந்திருந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. இதில் எனது கணவர் மூலம் நெருக்கடி ஏற்பட்டால் நடிகையின் பெயரை சொல்வேன். அவர்கள் உறவில் இருந்ததற்கான ஆதாரங்களையும் கொடுப்பேன். மேலும் வழக்கின் இரண்டாவது எதிர் மனுதாரராகவும் நடிகையை சேர்ப்பேன்" என பல விஷயங்களை கூறியிருந்தார்.

விஜய்யின் பிஆர் டீம்: இந்நிலையில் ஒரு ஆடியோ லீக்காகியிருக்கிறது. அந்த ஆடியோவில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரிடம் ஒருவர், "வணக்கம் ஒரு எமர்ஜென்சி சூழ்நிலை.கொஞ்சம் நிலைமை கையை மீறி போகிறது. தலைவர் என்ன சொல்கிறார் என்றால், 'கரூர் விஷயத்தை வைத்து அண்ணாவை முடக்க பார்த்தீர்கள், ஜனநாயகன் படத்தை முடக்கிவிட்டீர்கள், பாஜகவும், திமுகவும் கூட்டு சேர்ந்து அண்ணனை சிபிஐ ஆஃபிஸில் இரண்டு நாட்கள் அலைக்கழித்தீர்கள்.

Also Read
விஜய் விவாகரத்து.. அன்றே கணித்த நெப்போலியன்.. அப்போவே கரெக்ட்டா சொல்லிருக்காரே ப்பா
விஜய் விவாகரத்து.. அன்றே கணித்த நெப்போலியன்.. அப்போவே கரெக்ட்டா சொல்லிருக்காரே ப்பா

சங்கீதாவை அட்டாக் செய்ய வேண்டாம்: அண்ணன் மக்களை பார்க்கவிடாமல் செய்கிறீர்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் உங்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என போட்டு திமுகவுக்கு எதிராக ஒரு ஹேஷ்டேக் செட் செய்யப்போகிறோம். கரூர் விஷயத்தில் எப்படி வேலை செய்தோமோ அதுபடிதான் வேலை செய்யப்போகிறோம். சங்கீதா மேடமை அட்டாக் செய்ய வேண்டாம். இதற்கு பின்னால் திமுகதான் இருக்கிறது. இதன் மூலம் தேர்தலில் வெல்வதற்கு அண்ணனுக்கு வழிவகைதான் செய்திருக்கிறீர்கள் என பதிவுகள் போட சொல்லி தலைவர் சொல்லியிருக்கிறார்.

We Support Vijay Anna என்ற ஹேஷ்டேக்கை உருவாக்க வேண்டும். இன்னும் ஒரு மணி நேரத்தில் இதை செய்ய வேண்டும். அதற்கு பிறகு உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தலைவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்" என்றிருக்கிறார். இதை கேட்ட நெட்டிசன்களோ அந்த ஆடியோவில் தலைவர் என அவர் சொல்வது விஜய்யைத்தான். தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை சரிக்கட்ட விஜய் பிஆர் டீமை களமிறக்கிவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X