விஜய்யை நினைத்து கதறுங்க.. ரஜினியை போட்டு தாக்கிய ப்ளூ சட்டை மாறன்.. இப்படி இறங்கி அடிச்சிட்டாரே
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் அக்கட்சி களத்தில் நிற்கிறது. விஜய்யை பொறுத்தவரை திருச்சி கிழக்கு தொகுதியிலும், பெரம்பூர் தொகுதியிலும் களம் காண்கிறார். எப்படியாவது இந்தத் தேர்தலில் தனது பலத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு காட்டிவிட வேண்டுமென்ற முழு முனைப்பில் இருப்பதாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்ததிலிருந்தே விஜய்யை சுற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள், பிரச்னைகள். கரூர் துயர சம்பவம், ஜனநாயகன் பட முடக்கம், கரூர் விஷயம் தொடர்பாக சிபிஐ விசாரணை, மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனு, திரிஷாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவது என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவை அனைத்தையும் எதிர்கொண்டாலும்; நடக்கவிருக்கும் தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக அரசியல் ஆரவலர்கள் கருதுகிறார்கள்.

ஜனநாயகன் பிரச்னை: இதற்கிடையே ஜனநாயகன் படத்துக்கு காத்திருந்து காத்திருந்து நொந்துபோய்விட்டார்கள் அவரது ரசிகர்கள். நீதிமன்றத்திலிருந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டு மறுதணிக்கு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை அதிகாரிகள் சமீபத்தில்தான் பார்த்ததாக தெரிகிறது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு படமானது ரிலீஸாகலாம் என தெரிகிறது. சூழல் இப்படி இருக்க இப்படம் தொடர்பான பிரச்னை பற்றி ரஜினியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், 'சாரி.. அதை பற்றி பேச விரும்பவில்லை' என முடித்துக்கொண்டார்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் அவரது பேச்சை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "விஜய்யை கண்டு அலறும் தலீவர்: இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர்தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான்.
ரசிகர்கள் தலையில் மிளகாய்: 25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார். 2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார். 25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை.
கதறுங்க தலைவரே: சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது. சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார். கதறுங்க தலீவரே. கதறுங்க" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















