இளைய தளபதியாக 22 ஆண்டுகளைக் கடந்த விஜய்!

By Shankar

தமிழ் சினிமாவில் விஜய் நாயகனாக அறிமுகமாகி இன்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி திரையுலகினர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

1974-ல் பிறந்த விஜய், தன் தந்தை இயக்கிய பல படங்களில் குழந்தை வேடங்களில் நடித்துள்ளார்.

1992-ல் முதல் முறையாக நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நாயகனாக அறிமகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து சில சொந்தப் படங்களில், தந்தை எஸ்ஏ சந்திரசேரின் இயக்கத்தில் நடித்தார்.

ரசிகன்

ரசிகன்

எஸ்ஏசி இயக்கத்தில் அவர் நடித்த ரசிகன் படம் விஜய்க்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படம் 100 நாட்களைத் தாண்டியதோடு நல்ல வசூலையும் கொடுத்தது.

பூவே உனக்காக

பூவே உனக்காக

அதன் பிறகு 1995-ல் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பூவே உனக்காக. விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனை இந்தப் படம். ஒரு இயக்குநரின் மகன் என்பதெல்லாம் மறந்து, நல்ல நடிகராக விஜய்யை நிலை நிறுத்திய படம் இது.

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை

விஜய்யின் திரையுலக வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படம் காதலுக்கு மரியாதை. பாஸில் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான இந்தப் படம 200 நாட்களைத் தாண்டி ஓடியது.

துள்ளாத மனமும் துள்ளும்

துள்ளாத மனமும் துள்ளும்

காதலுக்கு மரியாதைக்குப் பிறகு, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்று விட்டார் விஜய். தொடர்ந்து அவர் நடித்த ப்ரியமுடன், நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்தன.

குஷி

குஷி

தொடர்ந்து வெற்றிப் படங்கள் தந்த அவருக்கு, நிலாவே வா படம் தொடங்கி தொடர்ந்து மூன்று படங்கள் சரியாகப் போகவில்லை. ஆனால் அதையெல்லாம் சரிகட்டும் விதத்தில் வந்தது எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி. பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

பகவதி, திருமலை

பகவதி, திருமலை

விஜய்யை பெரிய ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியவை பகவதி மற்றும் திருமலை போன்ற படங்கள்.

கில்லி

கில்லி

விஜய்யின் கேரியரில் உச்சமாக அமைந்தது கில்லி படம். தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்திலும் ஜொலித்தார் விஜய். படமும் மிகச் சிறப்பாக ஓடியது.

போக்கிரி

போக்கிரி

அதிரடி ரவுடி மற்றும் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்த போக்கிரியும் அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.

50வது படம்

50வது படம்

ஹீரோவாகி 18 ஆண்டுகள் நடித்த பிறகு தனது 50வது படத்தைத் தொட்டார் விஜய். அவரது 50வது படம் சுறா. எஸ் பி ராஜ்குமார் இயக்கிய இந்தப் படம் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

22 ஆண்டுகள்...

22 ஆண்டுகள்...

சுறாவுக்குப் பிறகு விஜய் நடித்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்கள் விஜய்க்கு வெற்றிகளைத் தந்தன. தலைவா படம் பெரிய சிக்கலைச் சந்தித்த பிறகு வெளியான. கடந்த தீபாவளிக்கு அவரது கத்தி வெளியானது. இது அவரது 57வது படம்.

58வது படம்...

58வது படம்...

இந்த ஆண்டு அவருக்கு சினிமாவில் 22 வயது. 58வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார். வரும் கோடையில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்த 22 ஆண்டுகளில் விஜய்யின் கேரியரில் பெருமளவு வெற்றிப் படங்களாக அமைந்திருப்பதால், இன்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் முன்னணி நாயகனாகத் திகழ்கிறார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X