விஜய்யை இந்த கிழி கிழிக்கிறாங்களே.. அவருடன் பணியாற்றிய நடிகையே என்ன சொல்றாங்க பாருங்க.. செமத்தியான அடி

சென்னை: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை விஜய்யின் தவெக தனித்து சந்திக்கவிருக்கிறது. என்டிஏ கூட்டணிக்கு அந்தக் கட்சி செல்லாதது தொண்டர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அந்தக் கூட்டணிக்கு சென்றிருந்தால், ஏற்கனவே சங்கீதா, திரிஷா விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் பின்னடைவைவிட இது அதிகம் உண்டாக்கியிருக்கும். நல்லவேளை அவர் செல்லவில்லை என்பது அனைவரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்யுடன் பணியாற்றிய நடிகை பேசியிருக்கும் விஷயம் வைரல் ஆகியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பாஜக - அதிமுக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கு தவெக செல்லவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் விஜய். நானும், நாங்களும் எப்போதும் மக்களின் டீம்தான். மதசார்பற்ற கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்று இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் விஜய் கூறிய பிறகுதான் தவெக தொண்டர்களுக்கு நிம்மதியே வந்தது.

Vijay Faces Criticism After Actress Babitha s Viral Interview Ahead of TN Elections
Photo Credit:

என்ன நிம்மதி?: ஏற்கனவே விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் வைத்த குற்றச்சாட்டு கொடுத்த அதிர்ச்சி அடங்குவதற்குள்; திருமணம் ஒன்றுக்கு திரிஷாவுடன் ஜோடியாக வந்தது மேற்கொண்டு பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டு செய்தது. அந்த விஷயங்கள் பின்னடைவை ஏற்படுத்தியிருந்த நிலையில்; என்டிஏ கூட்டணிக்கு மட்டும் சேர்ந்திருந்தால் இதுவும் பெரிய பின்னடைவாகத்தான் இருந்திருக்கும். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

Also Read
திமுகவுக்காக பிரசாரம் செய்ய தயாரான ரஜினிகாந்த்தின் மகள்.. அட இது லிஸ்ட்லையே இல்லையே
திமுகவுக்காக பிரசாரம் செய்ய தயாரான ரஜினிகாந்த்தின் மகள்.. அட இது லிஸ்ட்லையே இல்லையே

எப்படியாவது சமாளிக்க வேண்டும்: இதையெல்லாம் தாண்டி இன்னொரு விஷயமும் பூதாகரமாகியிருக்கிறது. அதாவது, கரூர் கூட்டத்தை ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தினார்கள் என தகவல்களும் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் விஜய்யிடம் நடந்த விசாரணையின்போது அதற்கான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் முன்வைத்ததாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இப்படி வாரா வாரம் ஏதோ ஒன்று தவெக தலைவரை சுற்றி நடந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் எப்படியாவது சமாளித்துவிட வேண்டும் என்ற நெருக்கடியும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு இருக்கிறது.

பபிதா பேட்டி: இந்நிலையில் ரசிகன் படத்தில், 'பம்பாய் சிட்டி' பாடலில் விஜய்யுடன் நடனமாடிய பபிதா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய் ஒரு மாநாட்டில் மேடைக்கு வந்தார். அப்போது எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்தார்கள். அந்த விசிட்டர்ஸோடு சேர்ந்து தனது தாயையும், தகப்பனையும் நிற்க வைத்தார். அது எனக்கு ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் தவறு இல்லையா?.. யாராவது இப்படி செய்வார்களா?.. தாய், தகப்பன்தான் கூட வர வேண்டும். ஆனால் இவரோடு புஸ்ஸி ஆனந்த் கூட வருகிறார்.

தள்ளிவிடுகிறார்: அவரது அம்மா அவரை கட்டிப்பிடிக்க வருகிறார். இவர் தள்ளிவிடுகிறார். விஜய்க்கு திமிர் அதிகமாகிவிட்டது. காணாததை காணும்போது தலைக்கனம் ஏறிடும் என்று சொல்வார்கள். அப்படித்தான் இவருக்கு ஏறியிருக்கிறது. யாரையும் மதிப்பதில்லை. நாம் பெரிய ஆள் என நினைக்கிறார். அவரை ரசியுங்கள். அதற்காக ஆட்சியை தூக்கி கொடுக்க முடியுமா?.. அப்படி நினைக்காதீர்கள். அவருக்கு அந்த அருகதையே இல்லை. 41 பேர் இறந்த இடத்தில் முதலில் நின்றாரா. நல்லக்கண்ணு இறந்ததற்கு வந்தது மாதிரி அதற்கும் சென்றிருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தையே பார்க்க முடியாதவர் எப்படி தமிழ்நாட்டை பார்ப்பார்" என்றார்.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X