திரும்ப போகும் ஐடியாவே இல்லை.. எங்கே கரூருக்கா?.. ஜனநாயகனில் தளபதி விஜய் இப்படி சிக்கிட்டாரே?

சென்னை: ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்பது ட்ரெய்லரை பார்க்கையில் உறுதியாகியிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ட்ரெய்லரில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகளும் வரவேற்பை பெற்றாலும்; இன்னொரு பக்கம் பெரும் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. முக்கியமாக திரும்ப போகும் ஐடியாவே இல்லை என்ற வசனத்தால் ரசிகர்களிடம் விஜய் பலமாக சிக்கிவிட்டார்.

ஜனநாயகன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்று பலரும் சொல்லி வந்தார்கள். ஆனால் இயக்குநர் வினோத்தோ அதற்கு ஆம் என்றும் சொல்லவில்லை; இல்லை என்றும் சொல்லவில்லை. அவரது மேம்போக்கான பதில்கள், பேச்சுக்களை கேட்டு; ஒருவேளை கேசியைத்தான் நமக்கு தருவாரோ என்று விஜய் ரசிகர்கள் உள்ளுக்குள் பயந்துகொண்டிருந்தார்கள் என்பது உண்மை.

நேற்று வெளியான ட்ரெய்லர்: சூழல் இப்படி இருக்க ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. அதை பார்க்கையில் இது பகவந்த் கேசரி ரீமேக்தான் என்று நூறு விழுக்காடு உறுதியாகியுள்ளது. இருந்தாலும் அரசியல் குறியீடுகள், வசனங்கள் உள்ளிட்டவை அப்ளாஸை அள்ளியிருக்கின்றன. விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் ஏற்றவாறு இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது தெரிவதாக பலரும் சொல்லிவருகிறார்கள். விஜய் ரசிகர்களிடம் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைத்தான் பெற்றிருக்கிறது.

Vijay Faces Heavy Trolls After Jana Nayagan Trailer Release No Turning Back Idea Dialogue Backfires
Photo Credit:

அனல் பறக்கும் வசனங்கள்: 'ஐ அம் கம்மிங்', 'மக்களுக்கு நல்ல செய்ய அரசியலுக்கு வர சொன்னால்; நீங்கள் கொள்ளை அடிக்கிறதுக்கும், கொலை பண்றதுக்குமா வரீங்க', 'திரும்ப போகும் ஐடியாவே இல்லை' போன்ற வசனங்கள் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு மைலேஜ் கூட்டுவதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சீன்கள் எல்லாம் தியேட்டரில் வரும்போது நிச்சயம் பிளாஸ் ஆகும் என்பதும் உறுதி.

ரசிகர்களின் ட்ரோல்: மேற்கூறிய வசனங்கள் பலரிடம் வரவேற்பை பெற்றாலும்; அரசியலில் விஜய்யின் எதிரிகளின் வாய்க்கு அவல் போட்டது மாதிரி ஆகிவிட்டது. முக்கியமாக, 'திரும்ப போகும் ஐடியாவே இல்லை' என்ற வசனத்தை வைத்து தளபதி விஜய்யை பயங்கரமாக கலாய்த்துவருகிறார்கள். திரும்ப போகும் ஐடியாவே இல்லை என்றால்; எங்கே தளபதி கரூருக்கு திரும்ப போகும் ஐடியா இல்லையோ; நீங்கள்தான் போகமாட்டீர்கள் என தெரியுமே. அதை சினிமா மூலமும் உறுதி செய்கிறீர்களா என்ற கேள்விகளை அதிகம் எழுப்பிவருகிறார்கள். அதுமட்டுமின்றி கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைகூட சந்திக்காமல் அவர் ஓடிய ஃபோட்டோவையும், வீடியோவையும் போட்டு; இப்படி தலை தெறிக்க ஓடியவர்தான்; வீர வசனங்களை பேசுகிறார் எனவும் ட்ரோல் செய்கிறார்கள்.

கரூர் துயர சம்பவம்: முன்னதாக, கடந்த வருடத்தில் 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆர்மபித்தார் விஜய். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக கரூருக்கு மக்களை தாமதமாக சென்றார். இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். ஆனால் விஜய்யோ அந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பிறகும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அப்போதிருந்து இப்போதுவரை கரூருக்கு நேராக சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை; ஆறுதல் கூறவும் இல்லை. மாறாக, அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறியது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X