விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா...வெறித்தனமால இருக்கு

பெரம்பலூர் : நடிகர் விஜய் தற்போது டைரக்டர் நெல்சல் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் பட வேலைகளில் படுபிஸியாக இருந்து வருகிறார். அவர் பற்றியும், அவரது படங்கள் பற்றியும் வெளியாகும் ஒவ்வொரு தகவலையும் திருவிழாவாக கொண்டாடும் அளவிற்கு விஜய் மீது வெறித்தனமாக பாசம் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

விஜய் பட அறிவிப்புக்கள் மட்டுமல்ல அஜித் படம் பற்றிய அறிவிப்பு ஏதாவது வந்தாலும் கூட, உடனடியாக விஜய் தொடர்பான ஹாஷ்டாக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கி விடுகின்றனர். இது போதாதென விஜய் படங்களை புகழ்ந்தும், அஜித் படங்களை கிண்டல் செய்தும் மீம்ஸ்களை உருவாக்குவது, ட்ரோல் செய்வது என இருந்து வருகின்றனர்.

விஜய்யை விட்டுக் கொடுக்காத ரசிகர்கள்

விஜய்யை விட்டுக் கொடுக்காத ரசிகர்கள்

கடந்த மாதம் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட போது கூட, அதற்கு போட்டியாக கத்தி ஹாஷ்டாக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கினர். அதில் கத்தி பட மோஷன் போஸ்டர் இருப்பதிலேயே பெஸ்ட் என கருத்தும் பதிவிட்டனர்.

வாத்தி கம்மிங் தான் பெஸ்ட்

வாத்தி கம்மிங் தான் பெஸ்ட்

அடுத்ததாக வலிமை படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்ட போதும், மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் லிரிக்கல் பாடலாக வெளியிடப்பட்ட வாத்தி கம்மிங் பாடலின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. விஜய் தான் பெஸ்ட் கூறி கொண்டாடினர்.

மூன்றாம் கட்டத்தில் பீஸ்ட்

மூன்றாம் கட்டத்தில் பீஸ்ட்

சமீபத்தில் தான் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் துவங்கியது. இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் பலரும் இணைவதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோ ஆகியோர் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

தனுஷும் இணைகிறார்

தனுஷும் இணைகிறார்

லேட்டஸ்ட் தகவலாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷும் இணைந்துள்ளாராம். பீஸ்ட் படத்திற்காக பாட்டெழுதி, அவரே பாட போகிறாராம். ஏற்கனவே சிவகார்த்திகேயனும் இந்த படத்திற்காக பாடல் எழுதுவதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களும் வேற லெவல் மாஸா ஹிட்டாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் கொண்டாட துவங்கி விட்டனர்.

விஜய்க்கு சிலை

விஜய்க்கு சிலை

சமீபத்தில் விஜய்க்கு ஆள் உயர சிலை வைத்து அதகளப்படுத்தினர் அவரது ரசிகர்கள். அது மட்டுமல்ல கொரோனா சமயத்தில் விஜய் நற்பணி இயக்கம் சார்பில் பல மக்கள் நலப்பணிகளை செய்து மக்கள் மனதிலும் விஜய்க்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்துள்ளனர்.

இப்படியொரு பாசக்கார ரசிகரா

இப்படியொரு பாசக்கார ரசிகரா

அப்படி விஜய் மீது வெறித்தனமாக பாசம் வைத்துள்ள ரசிகர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் விஜய்யின் ஓவியத்தை வரைந்து அசத்தி உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவர் தான் இப்படி விஜய்யின் ஓவியத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

வெறித்தனமான அன்பு

வெறித்தனமான அன்பு

விஜய் மீது தனக்கு இருக்கும் அன்பையும் ஈர்ப்பையும் காட்டுவதற்காகவே இந்த ஓவியத்தை அவர் வரைந்தாராம். விஜய்யின் வெறித்தனமான ரசிகர் செய்த இந்த காரியத்தை ஃபோட்டோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X