வெறித்தனம் ப்பா.. விஜய்க்காக ரசிகர் செய்த செயலை பாருங்களேன்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்கிவருகிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் விஜய்யின் ரசிகர் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்‌ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.

Vijay GOAT Tamizhaga Vetri Kazhagam

லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.

GOAT: அந்தவகையில் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் விஜய்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்த படம்: GOAT படத்தை முடித்துவிட்டு தனது 69ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை விஜய் யாருக்கு கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவருகிறது. இச்சூழலில் அந்த வாய்ப்பை கார்த்திக் சுப்புராஜ் தட்டி சென்றார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஹெச்.வினோத்தின் பெயர்தான் பலமாக அடிபடுகிறது. இந்த மாதம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர் செய்த செயல்: விஜய்க்கென்று பலர் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகவே இருப்பார்கள். அந்தவகையில் ரசிகர் ஒருவர் Soya Chunksகளை சிறு சிறு கம்பிகளில் ஒட்டி ஊன்றி வைக்கிறார். பிறகு அந்த சோயாக்கள் மீது டார்ச் லைட்டை அடிக்கும்போது பின் உள்ள சுவற்றில் விஜய்யின் உருவம் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரது கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகத்தான் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X