விஜய்யை த்ரிஷா பார்த்து ஒரு வருஷம் ஆகுதாம்.. வாழ்த்து போட்டோவை டீகோட் பண்ண தளபதி ரசிகர்கள்!

சென்னை: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் ரோர் க்ளிம்ப்ஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி மிகப்பெரியளவில் டிரெண்டாகி வருகிறது. அதை பார்த்த பலரும் முறுக்கு மீசை, கூலர்ஸ், ரவுடி போலீஸ் அதே பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி தான் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஜன நாயகன் க்ளிம்ப்ஸை ரசிகர்கள் டீகோட் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம், நடிகை த்ரிஷா வழக்கம் போல நேற்று இரவு தாமதமாக தளபதி விஜய்க்கு ஒரு போட்டோவை போட்டு வாழ்த்து சொல்ல, தற்போது அதையும் ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

Vijay fans decode and defend this is last year photo after Trisha shared a birthday wishes
Photo Credit:

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் குடும்பத்தில் பிரச்னை என்றும் சில நடிகைகளுடன் விஜய்யை சேர்த்து வைத்து கிசுகிசுக்களையும் கிளப்பி வரும் சூழலில் த்ரிஷாவின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட்: நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதே போல கடைசியாக நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே அபார்ட்மெண்டில் குடியிருந்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. லிப்ட் ஒன்றில் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோவை த்ரிஷா ஷேர் செய்து வாழ்த்தியிருந்தார். இந்நிலையில், இந்த முறை தனது செல்ல நாய்க்குட்டியை தளபதி விஜய் தூக்கி கொஞ்சும் போட்டோவை ஷேர் செய்து "Happy Birthday bestest" என வாழ்த்தியுள்ளார்.

குவியும் கமெண்ட்ஸ்: நடிகை த்ரிஷா வேண்டுமென்றே லேட்டாக வாழ்த்துகிறார் என்றும் அவருக்குள் ஏதோ ஒரு இன்டென்ஷன் உள்ளது என்றும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ கடைசியாக வந்துவிட்டது என்றும் பல வருடங்களாக நல்ல நண்பர்களாகவும் ஆன்ஸ்க்ரீன் ஜோடிகளாவும் த்ரிஷா விஜய் உள்ளது ரொம்பவே க்யூட் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் ஐ எம் யுவர் ஒன்லி ஆடம் உள்ளிட்ட தக் லைஃப் மீம்களும் கமெண்ட் செக்‌ஷனை நிரப்பியுள்ளன.

டீகோட் செய்த ரசிகர்கள்: நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் எல்லாம் த்ரிஷா பங்கேற்கவில்லை என்றும் இது கடந்த ஆண்டு கோட் படத்தின் சக்சஸ் மீட் சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோ தான் என அர்ச்சனா கல்பாத்தியுடன் அதே உடையில் விஜய் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து தளபதி ரசிகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

வாழ்த்து சொல்லாத மகன்: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக மாறி படத்தை இயக்கி வரும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடைசி வரை அப்பா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து ஏதும் சொல்லவில்லையே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. எதுவாக இருந்தாலும், அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் அதில், தேவையற்ற கருத்துக்களை மற்றவர்கள் கூறக்கூடாது என்பதே சரியான வாதமாக உள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X