twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அய்யோ, எங்களையும் டிவி சீரியல் பார்க்க வச்சுட்டாங்களே: புலம்பும் விஜய் ரசிகாஸ்

    By Siva
    |

    சென்னை: இப்படி எங்களை டிவி சீரியல் பார்க்க வைத்துவிட்டீர்களே என்று சர்கார் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    சர்கார்

    சர்கார்

    சர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் தமிழ்நாட்டு நேயர்கள் 250 பேருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமான டிக்கெட், ரூ. 2000 ரொக்கம், விழாவுக்கான டிக்கெட் இலவசம். இதை பெற திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 7 மணியில் இருந்து 9.30 வரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்.

    பதில்

    சன் டிவி நிகழ்ச்சிகளின் நடுவே அரை மணிநேரத்திற்கு ஒரு முறை கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம். ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் சரியான பதில் அளிக்கும் நேயர்களில் 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி தேர்வு செய்யப்படும் 250 பேருக்கு சர்கார் இசை வெளியீட்டு விழாவை சன் பிக்சர்ஸ் செலவில் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    தளபதி

    தளபதி

    தளபதி விஜய்யை நேரில் பார்க்கும் ஆசையில் அவரின் ரசிகர்கள் சன் டிவி சீரியல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சீரியல் பார்க்க ஆசைப்படவில்லை, சர்கார் கேள்விகளை பார்க்க டிவி முன்பு அமர்ந்திருர்கிறார்கள். இதை பார்த்த அம்மாக்கள் இவங்களுக்கு என்னாச்சு புதுசா சீரியல்லாம் பார்க்கிறாங்களே என்கிறார்கள்.

    சன் டிவி

    கடைசியில் எங்களையும் சீரியல் பார்க்க வைத்துவிட்டீர்களே என்று தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

    நந்தினி

    தளபதி ரசிகர்களின் நிலைமை இப்படியாகிவிட்டதே

    English summary
    Vijay fans are glued to Sun TV serials out of the desire to see their favourite actor in person at the Sarkar audio launch function to be held in Chennai on october 2nd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X