விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.. என்ஜாய் பண்ண ரெடியா?

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து தற்போது அவர் தளபதி 66 படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது 2வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக தனது தளபதி 67 படத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியானது பீஸ்ட் படம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார் பிரபல நாயகி பூஜா ஹெக்டே. படத்தில் விடிவி கணேஷ், செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

ஆனாலும் திரையரங்குகளில் தொடர்ந்து 50 நாட்கள் ஓடி, 227 கோடி ரூபாய் கலெக்ஷனை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் ஒரு படம் நடித்தாலே போதும் அதை கொண்டாடலாம் என்பதாக அவர்கள் விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.

தளபதி 66ல் விஜய்

தளபதி 66ல் விஜய்

அவர்களுக்கு பிடித்தமான படமாகவே பீஸ்ட் அமைந்தது. படத்தின் பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகள், ஆக்ஷன் சீக்வென்ஸ் என்று ஒவ்வொன்றையும் அவர்கள் கொண்டாடினர். இந்நிலையில் அடுத்ததாக விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தோழா என்ற வெற்றிப்படத்தை தமிழில் கொடுத்த வம்சி படிப்பள்ளி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

கொண்டாட காரணங்கள்

கொண்டாட காரணங்கள்

குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என படத்தில் கொண்டாடுவதற்கு அதிகமான விஷயங்கள் உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்து தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்

அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்

இன்னமும் படத்தில் டைட்டில், பர்ஸ்ட் லுக் போன்றவற்றை படக்குழு அறிவிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து தளபதி 66ஐ ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனிடையே தளபதி 67 படமும் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முன்தயாரிப்பு பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்தில் அவர் துவக்கவுள்ளதாகவும் அக்டோபரில் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அதிகரித்த லோகேஷ் சுமை

அதிகரித்த லோகேஷ் சுமை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என 4 வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக இவர் விஜய்யை இயக்கவுள்ளார். இந்தப் படம் தனது 100 சதவிகித படமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ள நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லோகேஷின் சுமையும் அதிகரித்துள்ளது.

Recommended Video

யானை Trailer-ஐ பார்த்து ஆரவாரம் செய்த ரசிகர்கள் #Kollywood |Filmibeat Tamil
விஜய் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்

விஜய் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்

இதனிடையே வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல லோகேஷ் -விஜய்யின் தளபதி 67 படம் குறித்த அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X