2022ஐ வரவேற்க தயாராகும் தளபதி விஜய் கேலண்டர்... ட்ரெண்டாக்கிவரும் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.

படத்தை பல்வேறு விதத்தில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தளபதி கேலண்டரை உருவாக்கியுள்ளனர்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

பிரம்மாண்ட மால் செட்

பிரம்மாண்ட மால் செட்

சென்னை, ஜியார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டமான மால் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. மேலும் பாடல் காட்சிகளும் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டன.

நெல்சன் திலீப்குமார் இயக்கம்

நெல்சன் திலீப்குமார் இயக்கம்

படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவரது முந்தைய படமான டாக்டர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விஜய் படத்திற்கு என்று தனியாக விளம்பரங்கள் தேவையில்லை, ரசிகர்களே தங்களது தளபதியை ட்ரெண்டாக்கி விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

பாடல் வெளியீட்டிற்கு வெயிட்டிங்

பாடல் வெளியீட்டிற்கு வெயிட்டிங்

படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும்நிலையில், அடுத்ததாக படத்தின் பாடல் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ட்ரெண்டானது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இந்நிலையில் பாடலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்து படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். நெல்சன் தனது முந்தைய படமான டாக்டர் பாடல் ரிலீஸ்களின்போது சிறப்பான வீடியோக்களுடன் வெளியிட்டு எதிர்பார்ப்பை கிளப்பினார்.

ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்கும் அத்தகைய பிரத்யேக வீடியோவுடன் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் இன்னும் சில மாதங்களில் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து விஜய் மற்றும் பீஸ்ட் படம் குறித்த பல்வேறு விஷயங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி கேலண்டர்

தளபதி கேலண்டர்

இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தற்போது தளபதி கேலண்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் பீஸ்ட் கேலண்டர், தளபதி கேலண்டர், தளபதி கேலண்டர் 2022, பீஸ்ட் கேலண்டர் 2022, மாஸ்டர், தளபதி 66 போன்ற ஹேஷ்டேக்குகளையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X