ஜன நாயகனை எப்படியாவது வெற்றி பெற வைப்போம்.. விஜய் ரசிகர்கள் என்னம்மா பிளான் போடுறாங்க பாருங்க!

சென்னை: விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை எப்படியாவது வெற்றி பெற வைப்போம் என விஜய் ரசிகர்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் மோடில் இருந்து மாறி விஜய்யின் விசுவாசியான ரசிகர்களாக மாறி வருகின்றனர்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பல முன்னணி நடிகர்கள் படங்கள் எல்லாம் ரசிகர்களை தியேட்டர் பக்கமே போகாத வண்ணம் பார்த்துக் கொண்டன. ஏகப்பட்ட ஃப்ளாப் படங்களை டாப் நடிகர்கள் கொடுத்து ரசிகர்களை கடுப்பாக்கி விட்டனர்.

Vijay fans plans to watch multiple times to make Jana Nayagan a Pongal Blockbuster
Photo Credit:

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பமே ரசிகர்கள் சண்டையால் நிம்மதியாக பொங்கலுக்கு பொதுமக்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க முடியுமா என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும் போல தெரிகிறது.

ஜன நாயகன் உடன் மோதும் பராசக்தி: விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் மோத தயாராகி விட்டது. கேவிஎன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜனவரி 10ம் தேதியே பராசக்தி படம் வெளியாகிறது. அதன் பின்னர், பெரிய படங்கள் என்று பார்த்தால், சூர்யாவின் கருப்பு, ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்கள் தான் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கின்றனர். தனுஷ், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரின் படங்கள் ஓரளவுக்கு வசூல் வேட்டை நடத்தி நடுவே காப்பாற்றும்.

55% - 45%: விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு 55 சதவீதம் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு 45 சதவீதம் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், மெயின் ஸ்க்ரீன்களையும் முக்கியமான தியேட்டர்களையும் ரெட் ஜெயண்ட் கைபற்றும் முயற்சியும் நடைபெற்று வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மற்ற மாநிலங்களிலும் சிக்கல்: நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பராசக்தி படம் செக் வைத்துள்ள நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியின் மனசங்கர வரபிரசாத் காரு மற்றும் பிரபாஸின் தி ராஜா சாப் என 2 கமர்ஷியல் படங்கள் சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகின்றன. அதன் காரணமாக டோலிவுட்டிலும் விஜய்யின் ஜன நாயகன் வசூல் தடை படும் என்கின்றனர். கேரளா மற்றும் ஓவர்சீஸில் மட்டுமே விஜய்க்கான ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கேயும் பிரபாஸ் டாமினேஷன் அதிகம் இருக்கும் என்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் பக்கா பிளான்: இந்நிலையில், ஜன நாயகன் படத்தை ஒரு முறை மட்டுமின்றி பல முறை பார்த்தே தீருவோம் என்கிற பக்கா பிளானை விஜய் ரசிகர்கள் போட்டு சோஷியல் மீடியாவில் மற்ற ரசிகர்களையும் தூண்டி வருகின்றனர். ஜனவரி 9ம் தேதி எல்லா ஷோவும் பார்க்கப் போவதாகவும், ஜனவரி 10ம் தேதி 3 காட்சிகள் மற்றும் ஜனவரி 11 முதல் 15 வரை 5 காட்சிகள் பார்ப்பேன் என விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் போட அதற்கு கீழே ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் இந்த முறை தளபதி ரசிகர்களின் பவரை காட்டுறோம் எனக் கூறி வருகின்றனர். படத்தின் ரிசல்ட் ஒருவேளை நெகட்டிவ் ஆனாலும், ரசிகர்கள் இந்த முடிவில் பின்வாங்காமல் இருப்பார்களா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X