ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க! வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ!
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது
Recommended Video

பெங்களூரு: மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ வைரலாகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் எவ்வளவு தீவிரமான ரசிகர்கள் என்பதை சர்கார் பிரச்சனை தெளிவுபடுத்தியது.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மைக்கேல் டென்னிஸ் என்ற அந்த இளைஞர், விஜய் போட்டோ உள்ள டி ஷர்ட் அணிந்திருக்கிறார். தன்னை விஜய்யின் தீவிர ரசிகர் என அடையாளப் படுத்திக்கொள்ளும் அவர், விஜய்யின் எல்லா படங்களையும் முதல்நாளே பார்த்துவிடுவார் என்றும், விஜய் நடிப்பில் கிழி கிழி என கிழிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும் தங்கத் தளபதியை நெஞ்சில் வைத்திருப்பதாக சொல்லும் அவர், எப்படியாவது விஜய்யை ஒருமுறை சந்திக்க வேண்டும், அதற்கு உதவுங்கள் எனக் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











