Ajith Kumar Salary: AK 63 படத்திலும் விஜய் சம்பளத்தை தொடவில்லையா அஜித்?.. விஜய் ரசிகர்கள் கலாய்!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் அஜித் குமார், சமீபத்தில் எச்.வினோத் இயக்கிய துணிவு படத்தில் நடித்திருந்தார்.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார், நடிகர் அஜித்குமார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், பிரியா பவானி ஷங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏகே 63: இதனை தொடர்ந்து அஜித்தின் 63 படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித்தின் ரசிகராக இருந்தவருக்கு அஜித்தை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரிஷா இல்லனா நயந்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூரியாவை வைத்து மார்க் ஆண்டணி என்னும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார்.
அஜித் குமார் சம்பளம்: அந்த படத்திலும் தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை காட்டும் விதமாக அஜித்தின் குறியீடுகளை ஏகபோகமாக வைத்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தான் இயக்கும் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். அஜித்குமாரின் 63வது படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடேயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் எல்ரட் குமார் தயாரிக்கிறார். தற்போது வரை AK 63 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் குமாரின் சம்பளம் முதலில் 162 கோடி என நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அப்படத்திற்கு அவர் வாங்கப்போகும் சம்பளம் மேலும் உயர்ந்து 165 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய்க்கு அதிகம்: ஆனால், தளபதி 68 படத்தில் விஜய்க்கு 200 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, முன்னணி நடிகர்கள் தங்களின் திரைப்படங்களில் போட்டியிடுவது குறைந்து தங்களது சம்பளங்களில் போட்டி போடும் சூழல் நிலவி வருகிறது. அந்த வரிசையில் முன்னிலையில் இருக்கும் இரண்டு நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இருந்தபோதிலும் தளபதி 68-க்கு இணையான சம்பளம் AK 63-க்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை என்கின்றனர். மேலும், நடிகர் அஜித் AK 64 படத்தில் விஜய்க்கு இணையான சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











