மாஸ் ஹீரோவாக வலம்வரும் விஜய்.. வெறித்தனமான ரசிகர்கள்.. தொடர் ட்ரெண்டிங்கில் விஜய் பிறந்தநாள்!

சென்னை : நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இதற்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர்.

தற்போது தளபதி 66 படத்தில் விஜய் நடித்துவரும் நிலையில், விஜய் பிறந்தநாளில் படத்தின் டைட்டில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையவுள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பும் அன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார் விஜய். அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. ஆயினும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

கரடுமுரடான பாதை

கரடுமுரடான பாதை

ஒரு கட்டத்தில் பூவே உனக்காக உள்ளிட்ட படங்கள் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், ரசிகர்களிடையே இளைய தளபதியாக மாறினார். தற்போது ரசிகர்களுக்கு தளபதியாகவும் மாறியுள்ள விஜய் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. தன்னுடைய கேலிக்குள்ளாக்கியவர்களுக்கு தன்னுடைய வெற்றியை அவர் பரிசாக கொடுத்துள்ளார்.

48வது பிறந்தநாள்

48வது பிறந்தநாள்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாகவும் கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும் ரசிகர்களிடையே அவரது மாஸ் குறையவில்லை. இந்நிலையில் தற்போது தன்னுடைய 48வது பிறந்தநாளை வரும் 22ம் தேதி விஜய் கொண்டாடவுள்ளார்.

ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

அவர் கொண்டாடவுள்ளார் என்று கூறுவதைக்காட்டிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர் என்றே குறிப்பிட வேண்டும். தற்போது அவரது பிறந்தநாள் #AdvHBDThalapathyVijay என்ற ஹேஷ்டாக்குடன் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த சில தினங்களாகவே இது ட்ரெண்டிங்கில் உள்ளது.

தளபதி 66 படத்தின் டைட்டில்

தளபதி 66 படத்தின் டைட்டில்

தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட்டத்துடன் செலவழிக்க, பல விஷயங்களை ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர். பல வீடியோக்கள் உள்ளிட்டவையும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அன்றைய தினம் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி67 பட அறிவிப்பு

தளபதி67 பட அறிவிப்பு

இதேபோல லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையவுள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பும் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X