வேட்புமனு தாக்கல் செய்த விஜய்.. காண்டாகி முறைத்த தேர்தல் அதிகாரி?.. என்னங்க புதுசு புதுசா கிளம்புது

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளில் களமிறங்கியிருப்பதால்; ஒரு தொகுதியில் சொதப்பினாலும் இன்னொரு தொகுதியில் எப்படியாவது வென்றுவிடலாம் என்பது அவரது பிளானாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க பெரம்பூரில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு; மக்களிடம் பரப்புரையையும் மேற்கொண்டார். இந்நிலையில் ஒரு விஷயம் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருப்பதால்; வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கைகள் வெளியீடு என பரபரத்து கிடக்கின்றன. தவெகவை பொறுத்தவரை தனித்தே களமிறங்குவது என்பதில் உறுதியாக இருந்து; அதன்படி அறிவிப்பும் வெளியிடப்பட்டது. நேற்று தான் உட்பட 234 வேட்பாளர்களும் எங்கே போட்டியிடப்போகிறோம் என்பதை விஜய் அறிவித்தார். அவர் பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Files Nomination in Perambur Officer s Reaction Goes Viral on Social Media
Photo Credit:

எதனால் இந்த முடிவு?: விஜய்க்கென்று தனி செல்வாக்கு தமிழ்நாட்டில் இருந்தாலும்; அதெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகமே. அதுமட்டுமின்றி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவும், அதில் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களையும் விஜய்யின் இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டது. இதன் காரணமாக அவருக்குள் ஒரு பயம் தொற்றிக்கொண்டதைத்தான்; அவர் இரண்டு தொகுதிகளில் நிற்பது உறுதி செய்திருப்பதாக கிண்டல்களும், விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. ஆனால் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் இதை பேசக்கூடாது என தவெகவினர் அந்தக் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

Also Read
உங்களுக்கு பிடிக்கலைனு மாத்த முடியாது.. விஜய்யிடம் ஓபனாக சொன்ன விக்ரமன்.. நெத்தியடி பாஸ்
உங்களுக்கு பிடிக்கலைனு மாத்த முடியாது.. விஜய்யிடம் ஓபனாக சொன்ன விக்ரமன்.. நெத்தியடி பாஸ்

வேட்புமனு தாக்கல் செய்த விஜய்: சூழல் இப்படி இருக்க பெரம்பூரில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார் விஜய். வழக்கமான வெள்ளை சட்டை, சந்தன நிற பேண்ட்டில் வந்து கூலாக வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்றார். அதனை முடித்துவிட்டு மக்களிடம் பேசிய விஜய், 'தமிழ்நாடு இந்த நிலைமைக்கு வந்ததற்கு தீய சக்தி திமுகதான் காரணம். அவர்களது எண்ணம் எல்லாம் குடும்பத்தோடு சேர்ந்து எப்படி கொள்ளை அடிப்பது என்பதுதான். இந்தத் தேர்தல் ஒரு தலைமுறைக்கான தேர்தல். எனவே நீங்கள் மறக்காமல் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள்.

Vijay Files Nomination in Perambur Officer s Reaction Goes Viral on Social Media
Photo Credit:

பாதுகாப்பே இல்லை: ஸ்டாலின் சார் ஆட்சியில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லை. இயற்கை உபாதை செல்லும்போதுகூட அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அடிப்படை பாதுகாப்பையே கொடுக்கவில்லை என்றால் எதற்காக இந்த ஆட்சி, அதிகாரம். அவர்களிடம் வண்டி வண்டியாக பணம் இருக்கிறது. கொள்ளையடித்த பணத்தை உங்களிடம் கொடுத்து வாக்கு கேட்டால்; நீங்கள் அதை வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிவிட்டு அவர்களது காதுகளில் விசிலை ஊதி அனுப்பிங்கள். எனக்கு ஒருமுறை தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள்.

முறைத்த அதிகாரி?: உங்களுக்காகத்தான் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு; அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்" என்றார். இந்நிலையில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தபோது நடந்த ஒரு விஷயம் சோஷியல் மீடியாவில் விவாத பொருளாகியிருக்கிறது. அதாவது விஜய் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனுவை கொடுத்தார். அதை அந்த அதிகாரி வாங்கியபோது, விஜய்யை பார்த்த புகைப்படத்தை பகிர்ந்து, 'இந்த அதிகாரி ஏன் இவ்வளவு கோபமாக முறைக்கிறார். இவ்வளவு கோபம் எல்லாம் கூடாது மேடம்' என தவெகவினர் சோஷியல் கருத்துக்களை பதிவிட தொடங்கிவிட்டார்கள். அதேசமயம் அந்த அதிகாரி எதார்த்தமாக கூட பார்த்திருக்கலாம்; இவர்கள் இஷ்டத்துக்கு கதை கட்டிவிடுகிறார்கள் எனவும் ஒருதரப்பினர் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X