என்னது…? திருமண விழாவில் தளபதி விஜய் தாக்கப்பட்டாரா..?
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் நெரிசலில் சிக்கி காயமடைந்தார்.
Recommended Video

சென்னை: திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.
நடிகர் விஜய் தற்போது சர்க்கார் திரைப்பட ஷுட்டிங்கை முடித்துவிட்டு, அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

தெளிவான பார்வை, நிதானமான பேச்சு, தொலைநோக்கு சிந்தனை, தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் திரையில் மட்டுமல்லாமல் தரையிலும் வெகுவாக விரும்பக்கூடிய மனிதராக வலம் வருகிறார் விஜய்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் என்பவரின் திருமணம் புதுச்சேரியை அடுத்த நாவற்குளத்தில் நடைபெற்றது.
அப்போது விஜய் வருகிறார் எனத் தெரிந்து ரசிகர்கள் குழுமியதால் திருமண மண்டபமே திக்குமுக்காடிப் போனது. விஜய் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்துவார் என அறிவிக்கப்பட்டதால், பல ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு மண மேடையில் ஏறியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தன் மனைவி சங்கீதாவுடன் மணமேடை வந்தபோது மணமக்களை வாழ்த்தியபோது ரசிகர்களின் நெரிசலை பவுன்சர்களாலும் சமாளிக்க முடியவில்லை. அதனால் விஜய்யின் காலில் லேசான காயம் பட்டது. மண்டபத்திலிருந்து வெளியே வந்தபோதும், ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்ததால் பரபரப்பு நிலவியது. பிறகு காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விஜய்யை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.
திருமண விழாவின்போது விஜய் அங்கே இருந்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என எண்ணி, திருமண விழாவை விஜய் ரசிகர்களின் விழாவாக மாறிவிடக்கூடாது என திட்டமிட்டு, நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே வந்துள்ளார் விஜய். அப்படியிருந்தும் எதிர்பாராத விதமாக இந்த தள்ளு முள்ளு நிகழ்ந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











