நாசர் மகனின் கனவை நிறைவேற்றி வைத்த விஜய்: ரசிகர்கள் லைட்டா பொறாமை
Recommended Video

சென்னை: நாசர் மகன் ஃபைசலின் கனவை நிறைவேற்றி வைத்துள்ளார் விஜய்.
நடிகர் நாசர், கமீலா தம்பதியின் மகன் ஃபைசல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்யோ ஃபைசலை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
விஜய்
விஜய் தனது கையில் கேக்கை வைத்திருக்க ஃபைசல் அதில் உள்ள மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் புகைப்படத்தை கமீலா நாசர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய் அண்ணாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்ற ஃபைசலின் கனவு நிறைவேறியுள்ளது.
ரசிகன்
தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் கேக்கை கையில் பிடித்துக் கொண்டு குனிந்து நிற்கும் விஜய்யை பார்த்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ரொம்ப பிடிச்சிருக்கு
விஜய்யின் இந்த குணம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு. ஃபைசலுக்கு கிடைத்த பாக்கியம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று சில ரசிகர்கள் லைட்டா பொறாமைப்பட்டுள்ளனர்.
ஆரவ்
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் கமீலா.


Click it and Unblock the Notifications











