விஜய்யிடமிருந்து வெங்கட் பிரபுவுக்கு பறந்த கட்டளை?.. எல்லாம் லியோ கொடுத்த பாடம்?

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் வெங்கட் பிரபுவுக்கு விஜய்யிடமிருந்து அட்வைஸ் சென்றிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். பவதாரிணி உயிரிழப்பால் படத்தின் ஷூட்டிங் இடையில் சில நாட்கள் தடைபட்டது. அதனையடுத்து மீண்டும் இப்போது ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்துவருகிறது. படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது.

Vijay Gave Advice To Venkat Prabhu For GOAT Movie

அரசியல் என்ட்ரி: விஜய் GOAT படத்தில் கமிட்டானபோதே அதுதான் அவருடைய கடைசி படம். விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பலரால் கூறப்பட்டது. அதற்கெல்லாம் விஜய் அமைதியாக இருந்தார். திடீரென 'தமிழக வெற்றி கழகம்'என்ற கட்சியை தொடங்குவதாக எந்தவித அலட்டலும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துவிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் வேலைகளும் ஆரம்பித்திருக்கின்றன.

எப்போது ரிலீஸ்: இதற்கிடையே, GOAT படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு பாடல் கடந்த 14ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் விஜய்யின் நடனம் பட்டாசாக இருந்தது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல் பிரசாந்த்தும் இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். அவரது நடனமும் ரசிக்கும்படி இருந்ததாகவே பலர் சொல்கிறார்கள். .

செகண்ட் சிங்கிள்: படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் செகண்ட் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அநேகமாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபுவுக்கு விஜய்யிடமிருந்து ஒரு அட்வைஸ் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

என்ன அட்வைஸ்: அதாவது, படத்துக்கு ஓவர் ஹைப் கொடுக்க வேண்டாம். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறிய அளவில் ஒரு சொதப்பல் நிகழ்ந்தால்கூட மொத்த படமும் காலியாகிவிடும். எனவே எவ்வளவுக்கு எவ்வளவு சிம்ப்பிளாக இருக்க முடியுமோ அப்படி இருக்கும்படி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், எல்லாம் லியோ கொடுத்த பாடமோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

படத்துக்கு நோ: இதற்கிடையே விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போடும் திட்டத்தையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்ததால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர். அதேசமயம் விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X