அஜித் படம் ஹிட்டானதுக்கு விஜய் ட்ரீட் கொடுத்தாரு.. எந்த படத்துக்குன்னு தெரியுமா!
சென்னை : நடிகர் விஜய் இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வருகிறது
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
அஜித் படம் வெற்றி பெற்றதற்காக விஜய் ட்ரீட் கொடுத்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளது இரு தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

போட்டியாளர்களாக
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களாக திரைத்துறையில் போட்டியாளர்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது அந்த வகையில் விஜய்க்கு கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

கொடூரமான வில்லனாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது இந்த படத்தில் விஜய் ஜேடி என்ற கதாபாத்திரத்தில் ப்ரொஃபஸராக நடித்திருப்பார். இதுவரை நடித்த படங்களிலேயே ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்திருப்பார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருப்பார். பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக வந்து நடித்து பலரது கவனத்தையும் பெற்றது.

ஹாலிவுட் தரத்தில்
தன்னுடைய படங்களில் சமூக பிரச்சனைகளையும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் குரல் கொடுத்து வரும் நடிகர் அஜித் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். நேர்கொண்டபார்வை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை பெரும் எதிர்பார்ப்பில் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டது இந்த படத்தில் அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு பைக் ரேஸர் காட்சிகளில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். ஹாலிவுட் தரத்தில் வெளியான வலிமை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அஜித் படம் வெற்றி பெற்றதற்கு விஜய் ட்ரீட்
இவ்வாறு திரைத்துறையில் அஜித் மற்றும் விஜய் இரு துருவங்களாக போட்டியாளர்களாக பார்க்கப்படும் நிலையில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை பார்த்த விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு பிரபுவை நேரடியாக வீட்டுக்கு அழைத்து ட்ரீட் வைத்துள்ளார். அஜித் படம் வெற்றி பெற்றதற்கு விஜய் ட்ரீட் கொடுத்துள்ள சம்பவத்தை சமீபத்தில் வெங்கட்பிரபு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த இருதரப்பு ரசிகர்களும் நெகிழ்ந்து போயினர்.


Click it and Unblock the Notifications











