சினிமாவுக்கே எண்டு கார்டு.. எமோஷனலான விஜய்.. ஜனநாயகன் டீமுக்கு அதிரடியா இப்படியொரு உத்தரவா?
சென்னை: ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் கடைசி நாள் ஷூட்டிங்கை படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜன நாயகன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்த நிலையில், கடைசி நாள் ஷூட்டிங் அன்று கேக் கட்டிங் உள்ளிட்ட பல விஷயங்களை எச். வினோத் பிளான் செய்திருக்கிறாராம். அதற்கான அனுமதியை விஜய்யிடம் வாங்குவதற்காக அவரிடம் சொல்ல, எதுவுமே வேண்டாம் என்று சொல்லி மனுஷன் எமோஷனலாகி விட்டார் என்கின்றனர்.
அப்பா சந்திரசேகர் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி விஜய் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். படிப்பின் மீதெல்லாம் ஆர்வம் செல்லாமல் முழுக்க முழுக்க சினிமா மீதே ஆர்வம் சென்ற நிலையில், 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.

அப்பா இயக்கத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்த விஜய் பூவே உனக்காக படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறும் பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறினார்.
விஜயகாந்த், ரஜினிகாந்தை பார்த்து: முதல் படத்திலேயே விஜயகாந்த் உடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன் படத்திலும் நடித்துள்ளார். அப்பா இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் நடிப்பதை பார்த்து வளர்ந்த விஜய்க்கு எம்ஜிஆர் படங்களும் ரொம்பவே பிடிக்கும். தானும் இப்படியொரு ஹீரோவாகத்தான் வரவேண்டும் என்பதை அப்போதே மனதில் நிறுத்திய விஜய், ரஜினிகாந்துக்கு அடுத்து தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் ரஜினிகாந்த்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் மாறியுள்ளார்.
கடைசி படம்: சினிமாவை தாண்டி அரசியலில் களமாடப் போகிறேன் என ரஜினிகாந்த் பல ஆண்டுகள் சொல்லி வந்த நிலையில், அதே போல விஜய்யும் சொல்கிறார் என்றும் அவர் அரசியலுக்குள் எல்லாம் வரமாட்டார் என்று விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஜன நாயகன் தான் என் கடைசி படம் என்பதை அறிவித்தது மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி மிகப்பெரிய மாநாட்டையும் நடத்திக் காட்டியுள்ளார். திமுக மற்றும் பாஜக கட்சியை நேரடியாக எதிர்த்து அந்த கட்சிகளுக்கு எதிராகத்தான் தனது ஆட்சி அமையும் என்றும் உறுதியாக கூறி வருகிறார். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவடைய போகிறதாம்.

எமோஷனலான விஜய்: பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர், லியோ, கோட் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள விஜய் அரசியலுக்காக ஜன நாயகன் படத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்கிற முடிவை எடுத்திருக்கிறார். இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கை திருவிழாவாக நடத்தி மறக்க முடியாத செண்ட் ஆஃபை விஜய்க்கு கொடுக்க எச். வினோத் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில், அதுபற்றி அறிந்த விஜய் அதெல்லாம் வேண்டாம்ப்பா என்றும் இன்னும் 4 நாள் எக்ஸ்ட்ரா கால்ஷீட் கேட்டா கூட நடிச்சித் தரேன், இப்படியெல்லாம் பண்ணாதீங்க என எமோஷனலாக சொல்லிவிட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











