ட்விட்டரில் டிரென்டாகும் 'விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா'
சென்னை: விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா என்பது உலக அளவில் ட்விட்டரில் டிரென்டாகியுள்ளது.
விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் தளபதியை அவ்வப்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதனால் விஜய்யின் பெயர் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது. தலைவா பிரச்சனைக்கு பிறகு இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்வது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில் விஜய் நேற்றைய விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா
விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா என்ற வார்த்தை ட்விட்டரில் டிரென்ட் ஆகியுள்ளது.

வீ லவ் விஜய் அண்ணா
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீ லவ் விஜய் அண்ணா என்ற வார்த்தை ட்விட்டரில் டிரென்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடை வரிசை
சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு கடைசி வரிசையில் சீட் கொடுத்தாலும் இன்றைய நாளிதழ்களில் அவரது போட்டோ தான் முன்பக்கத்தில் உள்ளது என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

செல்லப் புள்ள
விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா எங்க வீட்டு செல்லப் புள்ள...உன்ன போல யாருமில்ல என்று விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











