என்னது விஜய் இன்ஸ்டாகிராம்ல வருகிறாரா? ஃப்ரொபைலும் ரெடியாயிடுச்சா.. சூப்பர் தகவலா இருக்கே!
சென்னை : நடிகர் விஜய் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர்.
அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். தொடர்ந்து சூட்டிங்கில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று நடித்து வருகிறார்.
தற்போது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இவருக்கு அக்கவுண்ட் காணப்படுகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு அசைவையும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். உடனுக்குடன் அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் வருகின்றனர். இதனால் தொடர்ந்து பல விஷயங்களில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கிலேயே விஜய் காணப்படுகிறார்.

அரபிக்குத்து வீடியோ பாடல்
தற்போது அவரது பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து வீடியோ பாடல் 150 மில்லியன் வியூசை தாண்டியுள்ளதையடுத்து அவர் ட்ரெண்டிங்கில் உள்ளார். தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்திற்காக அவரை அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங்கிலேயே வைத்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் இந்தப் பாடலின் லிரிக் வீடியோவும் 400 மில்லியனை தாண்டியுள்ளது.

வாரிசு படம்
தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் படத்திற்கான சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார், பிரபு, ஷாம் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

பன்முத் திறன்
நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் தன்னுடைய ரசிகர்களின் துணையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் விஜய். இதேபோல சமூக வலைதளங்களிலும் இவர் ஆக்டிவாக காணப்படுகிறார். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இவருக்கு அக்கவுண்ட் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் இவர் பதிவுகளை இடுவதில்லை.

ட்விட்டரில் ஆக்டிவ்
இறுதியாக ஃபேஸ்புக்கில் இவர் கடந்த 2020 ஜனவரி 27ல் கடைசியாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அதில் எந்த பதிவையும் இவர் இடவில்லை. ஆனால் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது படங்களின் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். கடந்த மாதம் தன்னுடைய பிறந்தநாளையொட்டி வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் 3 லுக் போஸ்டர்களை வெளியிட்டிருந்தார்.

லட்சக்கணக்கில் பாலோயர்கள்
ஃபேஸ்புக்கில் இவர் கடந்த 2020 ஜனவரி 27ல் கடைசியாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அதில் எந்த பதிவையும் இவர் இடவில்லை. ஆனால் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது படங்களின் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். கடந்த மாதம் தன்னுடைய பிறந்தநாளையொட்டி வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் 3 லுக் போஸ்டர்களை வெளியிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இணையும் விஜய்
இளைஞர்கள் அதிகமாக பார்த்துவரும் உபயோகித்துவரும் இன்ஸ்டாகிராமில் விஜய் இணையவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்காக actorvijay என்ற ப்ரொஃபைல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவரது இந்தப் பக்கம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி செயல்படுவார்?
2k கிட்ஸ் அதிகமாக பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகிறது. அதிகமான நடிகர்கள், நடிகைகள் இந்தப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகின்றனர். தங்களது அதிகமான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அதிகமான பதிவுகளை போடாமல் இருக்கும் விஜய், இன்ஸ்டாகிராமில் எப்படி செயல்படுவார் என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications











