Vijay: நானே வரேன்.. ரசிகையின் கையால் மாலை போட்டுக் கொண்ட தளபதி விஜய்.. கேரளாவில் கொண்டாட்டம்!
சென்னை: பாண்டிச்சேரியில் ரசிகர்களை சந்திக்க ஆரம்பித்த நடிகர் விஜய் கேரளா வரை ரசிகர்களை தினமும் ஷூட்டிங் முடிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சந்தித்து வருகிறார். காஷ்மீரில் லியோ ஷூட்டிங் நடைபெற்று முடிந்த பின்னர் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிளாஷ்பேக் போர்ஷன்கள், கிளைமேக்ஸ் காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டன.
ஆனால், அப்பொதெல்லாம் நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்கவில்லை. அரசியலுக்கு வர முடிவு செய்ததும் தொடர்ந்து ரசிகர்களை சந்திக்க ஆரம்பித்து விட்டார் விஜய். கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரமான மீசை இல்லாத விஜய் லுக்கிலேயே ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

கேரளாவில் விஜய் காலடி எடுத்து வைத்ததில் இருந்தே அங்கே உள்ள ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் சூட்டிங் ஸ்பாட்டுக்கும் படையெடுத்து வருகின்றனர்.
கேரளாவில் கெத்துக்காட்டிய லியோ: மஞ்சுமெல் பாய்ஸ் மட்டும் தான் இங்கே வசூல் செய்யுது கேரளாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம். விஜய்யின் லியோ படத்துக்கு கூட சமீபத்தில் பலருக்கும் டிக்கெட் கிடைக்காத நிலைமை இருந்தது என மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜே விஜய்க்கு கேரளாவில் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி ஆடுஜீவிதம் பட புரமோஷனில் பேசியுள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போதே அனைவரும் அறியும் வண்ணம் ரசிகர்கள் செய்து விட்டனர்.
அங்கேயும் கேரவன்: நேற்று கேரளாவில் விஜய்யை காண கூடிய ரசிகர்களை அங்கேயும் பெரிய கேரவன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு தளபதி தரிசனம் கொடுத்தார். தேன்கூடு போல ரசிகர்கள் ஒருத்தர் மீது ஒருத்தர் ஒட்டிக் கொண்டு விஜய்யை சந்திக்க காத்துக் கிடந்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சினிமாவை தாண்டி நடிகரை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அனைவருக்கும் இருந்தாலும், விஜய்யை காண கேரள ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருப்பது எல்லாம் பிரம்மிப்பின் உச்சம்.
ரசிகையின் கையால் மாலை: இந்நிலையில், இன்றைய கோட்டாவாக நடிகர் விஜய் தங்கியிருந்த ஹோட்டல் முன்பாக ஏகப்பட்ட ரசிகர்கள் வரிசையாக கூடி நின்றனர். அதில், ஒரு ரசிகை விஜய்க்கு மாலை போட்டே தீர வேண்டும் என கையில் மாலையுடன் இருப்பதை பார்த்து விட்ட விஜய், நானே வரேன் என அங்கே ஓடிச் சென்று ரசிகையின் கையால் மாலையை வாங்கி அணிந்துக் கொண்டார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது


Click it and Unblock the Notifications











