Vijay - ஜோதிகாவா, அசினா, திரிஷாவா?.. தளபதி விஜய் சொன்ன நச் பதில்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் திரிஷா குறித்து பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

லியோ வசூல்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த மூன்று படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி: இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதிதான் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறினர். இதனையொட்டி ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பஞ்சாயத்தும் ஆரம்பித்தது. ஆனால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். அதேபோல் ரஜினிகாந்த்தும் அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
GOAT: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். மும்முரமாக தொடங்கிய ஷூட்டிங் பவதாரிணியின் உயிரிழப்பால் தடைப்பட்டது. தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தாரோ அதேபோல் வெங்கட் பிரபு விஜய்க்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்தும் ஒதுங்கவிருக்கிறார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் திரிஷா குறித்து விஜய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் அனுவில் விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டனர். அப்போது விஜய்யிடம் அனுஹாசன், உங்களுக்கு பொருத்தமான ஜோடி ஜோதிகாவா, அசினா, திரிஷாவா என்று கேள்வியை முன்வைத்தார். அதற்கு சில நொடிகள் தீவிரமாக யோசித்த விஜய், 'எல்லோரும் சொல்றாங்க.. விஜய் - திரிஷாதான் என்று. அதனால் இவங்கதான்’ என்றார். அந்த வீடியோவை பலரும் தற்போது பகிர்ந்துவருகின்றனர்.
சர்ச்சை: இதற்கிடையே விஜய்யை சுற்றி இன்னொரு சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது அவரும் மனைவி சங்கீதாவும் பேசிக்கொள்வதில்லை. இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் சங்கீதா தனது மகளுடன் லண்டனில் வசித்துவருகிறார். விஜய் இங்கு தனியாகத்தான் இருக்கிறார். அதற்கு காரணம் திரிஷாவுடன் விஜய்க்கு மீண்டும் ஏற்பட்ட பழக்கம்தான் போன்ற பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அதில் துளிக்கூட உண்மையில்லை என்று விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











