விஜயகாந்த் மகனுக்கு விஜய் செய்யப்போகும் உதவி இதுவா?.. செம விஷயமா இருக்கே
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைவை அடுத்து அவரது மகனுக்கு விஜய் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதற்கிடையே கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து விஜயகாந்த்தை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார். இந்தச் சூழலில் விஜயகாந்த்தின் வீட்டுக்கு நேற்று விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி சென்று பிரேமலதாவை சந்தித்தார்கள்.
விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வசதியான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கலாம். ஆனால் சினிமா ஆசை கொண்டு சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவர் சென்னையில் இறங்கும்போது அவருக்கு இரண்டே துணைகள்தான். ஒன்று திறமை துணையாக இருந்தது; இரண்டாவது அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் துணையாக இருந்தார். கரியரின் ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் பட்டு ஒருவழியாக ஹீரோவாகி மின்ன தொடங்கிவிட்டார்.

உதவும் குணம்: ஹீரோ ஆகிவிட்டால் பொதுவாக மற்றவர்களிடம் பழகுவதற்கு ஒரு வித தயக்கத்தை காட்டுவார்கள். ஆனால் விஜயகாந்த்தோ அப்படி இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு அடுத்ததாக பெரிய ஹீரோ என்றால் அது விஜயகாந்த்தான். அந்த நிலையில் இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதில் எந்த பந்தாவும் காண்பிக்காமல் ரொம்பவே எளிமையாக பழகினார். முக்கியமாக பலருக்கு பல உதவிகளை செய்தார்.
நட்சத்திரங்களுக்கும் உதவி: சாமானியர்களுக்கு மட்டுமின்றி இப்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருக்கும் அவர்களது கரியரின் ஆரம்பத்தில் உதவி செய்தவர் விஜயகாந்த். அவர்கள் தவிர்த்து மன்சூர் அலிகான், போண்டா மணி, ஷாம் என அவர் உதவி செய்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அதனை அனைவருமே நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.
விஜய்க்கு செய்த உதவி:முக்கியமாக விஜய் வளர்ந்துவந்த சமயத்தில் அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து உதவி செய்தார் விஜயகாந்த். இதனால் விஜயகாந்த்தின் மகனுக்கு விஜய் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதற்கிடையே விஜய் இப்போது நடித்திருக்கும் GOAT படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து விஜயகாந்த்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
விஜய் செய்யப்போகும் உதவி: இந்நிலையில் நேற்று விஜயகாந்த்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி சந்தித்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகின. இந்நிலையில் அந்த சந்திப்பின்போது நடந்த ஒரு விஷயம் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தான் நடிக்கப்போகும் தளபதி 69 படத்தில் விஜயகாந்த்தின் மகனான சண்முகபாண்டியனுக்கு முக்கியமான ரோலை கொடுக்கப்போவதாக விஜய் உறுதியளித்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











