தன்னை வைத்து படம் தயாரித்த ஆரம்பகால தயாரிப்பாளர்களுக்கு விஜய் நிதியுதவி!
சென்னை: தன்னை வைத்து ஆரம்பத்தில் படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்துள்ளார்.

விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
இவ்விழாவில் விஜய்யை வைத்து 'வசந்த வாசல்' என்ற படத்தை தயாரித்த எம்.ராஜராம், 'ராஜாவின் பார்வையிலே' படத்தை தயாரித்த எஸ்.சவுந்திர பாண்டியன், 'மின்சார கண்ணா' படத்தை தயாரித்த கேஆர்ஜி மனைவி ஆர்.சாந்தா, 'ஒன்ஸ்மோர்' படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்திரன், 'விஷ்ணு' படத்தை தயாரித்த எம்.பாஸ்கர் அவருடைய மகன் பாலாஜி பிரபுவுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார்.

மனிதநேய அடிப்படையில் இந்த பணத்தை விஜய் வழங்கியதாக விழாவில் குறிப்பிட்டார்கள்.
இந்த விழாவில், நடிகர் விஜய், 'ஜில்லா' பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியும் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











