twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டீக்கடை தொழிலாளி மகளின் படிப்புச் செலவை ஏற்றார் நடிகர் விஜய்!

    By Shankar
    |

    சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த டீக்கடைத் தொழிலாளி மகளின் படிப்புச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்ப்பவர் எம்.ஷாகுல் ஹமீது. இவரது மனைவி பாஹிரா பேஹம்.

    vijay

    அரசுப் பள்ளி மாணவி

    இவர்களது மகள் பாத்திமா சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்.

    வறுமை சூழல்

    பாத்திமாவிற்கு இன்ஜினீயரிங் துறையில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.

    விஜய் உதவி

    இந்த விஷயத்தை தனது உதவியாளர்கள் மூலம் அறிந்த விஜய், பாத்திமாவின் இன்ஜினீயரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார். சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினீயரிங் கல்லூரியில் இதற்கான தொகையை விஜய் செலுத்திவிட்டார்.

    மாணவி கண்ணீர்

    இதுபற்றி மாணவி பாத்திமா கூறுகையில், "இன்ஜினீயரிங் துறையில் ஐ.டி. படிக்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். ஆனால் எங்கள் வறுமை சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போய்விடுமோ என தவித்துக் கொண்டிருந்தேன்.

    vijay

    கடவுள் போல்

    இந்த சமயத்தில், கடவுள் போல் விஜய் அண்ணா வந்து எனக்கு உதவி செய்துள்ளார். இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். நான் நல்லபடியாக படித்து வேலைப் பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றுவேன். நன்றாக படி, எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தந்த விஜய் அண்ணாவிற்கு நன்றி' என்றார் கண்ணீர் மல்க.

    வாழ்நாள் முழுக்க

    பாத்திமாவின் தந்தை ஷாகுல் ஹமீது கூறும்போது, ‘எங்கள் மகள் படிப்பிற்கு உதவி செய்துள்ள விஜய் தம்பிக்கு எங்கள் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளோம்,' என்றார் நெகிழ்ச்சியுடன்.

    English summary
    Actor Vijay has helped financially to a tea shop worker's daughter for her higher studies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X