மலேசியாவில் கால் வைத்ததும் ஸ்பீக்கரை தூக்கிய தளபதி விஜய்.. ஏன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!

சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியா புறப்பட்டுச் சென்றார். மலேசியா விமான நிலையத்தில் விஜய் வந்து இறங்கிய நிலையில், பாரம்பரிய நடனமாடி சிறுவர்கள் தளபதியை வரவேற்றனர்.

விஜய், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியாவுக்கு ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தளபதி கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க மலேசியா விரைந்துள்ளனர். தனது அம்மா ஷோபாவுடன் விஜய் தனி விமானத்தில் சென்ற காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Vijay holding a speaker at Malaysia Airport vows fans
Photo Credit:

இந்நிலையில், விஜய்க்கு சிறுவர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கும் போது, ஸ்பீக்கரை தூக்கி விஜய் கையில் வைத்திருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மலேசியாவில் தளபதி விஜய்: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக மலேசியாவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடத்தவுள்ளது. சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய மிகப்பெரிய மைதானம் அது. அங்கே ஏகப்பட்ட இசை கச்சேரிகள் மற்றும் பெரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவும் அங்கு தான் நடக்கிறது. அதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார் விஜய்.

Vijay holding a speaker at Malaysia Airport vows fans
Photo Credit:

பாரம்பரிய நடனம்: தளபதி விஜய்யை உற்சாகமாக வரவேற்க மாலிக் எண்டர்டெயின்மென்ட் மற்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து மலேசியாவில் தடபுடலாக ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். மலேசியாவில் விமானத்தில் இருந்து விஜய் இறங்கியதும், அங்குள்ள மாணவர்கள் பாரம்பரிய நடனமாடி தளபதிக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.

Vijay holding a speaker at Malaysia Airport vows fans
Photo Credit:

ஸ்பீக்கரை தூக்கிய விஜய்: மாணவர்கள் நடனமாடுவதற்கு ஏற்ப இசை பாடல் ஒலிக்கும் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் அங்கே இருந்த நிலையில், அதை கையில் ஏந்திக் கொண்டு விஜய் மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன. விஜய்யுடன் ராக்ஸ்டார் அனிருத்தும் வைப் செய்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் என தளபதியின் தம்பிகளும் மலேசியா வந்து சேர்ந்துவிட்ட நிலையில், இன்று இரவே பிரபலங்கள்ன் பார்ட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X