சீக்கிரம் வந்துவிடுங்கள் அஜித்.. விஜய் சி.எம். ஆகிட்டாரு.. இயக்குநர் வைத்த கோரிக்கை
சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் - விஜய் என்ற போட்டி பல வருடங்களாக இருந்தது. இரண்டு பேருமே கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். இனிமேல் அவர் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவையும் எடுத்துவிட்டார். அஜித்தை பொறுத்தவரை திரைத்துறையிலிருந்து ஒதுங்காவிட்டாலும்; பெரும்பாலான கவனம் கார் ரேஸ் மீதே இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் பேரரசு வைத்திருக்கும் கோரிக்கை ஒன்று வைரலாகியிருக்கிறது.
கோலிவுட்டில் அஜித்தும், விஜய்யும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நடிக்க வந்தவர்கள். ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தார்கள். அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர் படத்தில் சில நாட்கள் நடித்தார்கள். அஜித் விலகிவிட சூர்யா உள்ளே வந்தார். அப்போதிருந்து அஜித்தும், விஜய்யும் மீண்டும் சேர்ந்து நடிக்கவே இல்லை. அவர்கள் தங்களுக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி; ரசிகர் படையையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ரஜினி - கமலுக்கு பிறகு திரைத்துறை சந்தித்த பெரிய போட்டிகளில் ஒன்று அஜித் - விஜய்.

அடுத்தடுத்த நகர்வுகள்: இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் எக்கச்சக்க சண்டைகள் வந்திருக்கின்றன. அதனை ஆரம்பத்தில் இருவரும் கண்டுகொள்ளவில்லை. போகப்போக அவர்களும் பக்குவமாக; ரசிகர்களும் பக்குவமாக சண்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. நிலைமை இப்படி இருக்க விஜய் அரசியலுக்கு சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிவிட்டார். அஜித்தோ திரைத்துறையைவிடவும் கார் ரேஸில் தனது அதிக கவனத்தை செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் நிரப்புவார்?: தங்களது சிறு வயது ஆஸ்தான ஹீரோக்களில் ஒருவர் சினிமாவைவிட்டு விலகிவிட்டார்; இன்னொருவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் என்பதை பார்க்கும்போது 90ஸ் கிட்ஸ் உள்ளபடியே வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றாலும்; எஸ்கே நிரப்புவார் என்றெல்லாம் குரல்கள் கேட்கின்றன. விஜய்யை பொறுத்தவரை ஜனநாயகன் படம் அவரது கடைசி படமாகும். அடுத்ததாக அஜித்தோ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
பேரரசு கோரிக்கை: விஜய்யும் ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டதால் அஜித் தனது கவனத்தை சினிமாவில் அதிகப்படுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. இந்நிலையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி அஜித்தை வைத்து திருப்பதி படங்களை இயக்கிய பேரரசு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர், "அஜித் சாருக்கு ஒரு வேண்டுகோள். ரொம்ப கேப் விட்டுவிடாதீர்கள். பழைய கார்த்திக் கேப் விட்டார். இன்னொரு கார்த்தி வந்தார். அதேபோல் அஜித் சார் கேப் விட்டு காரில் சுற்றினால்; இன்னொரு அஜித் வந்துவிடுவார். அப்படி ஒருவர் வந்துவிட்டார்.
சீக்கிரம் வந்துவிடுங்க: எனவே அஜித் சார் கார் ரேஸை எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் வாருங்கள். விஜய் இப்போது சி.எம் ஆகிவிட்டார். எனவே ஏகே விரைவில் வர வேண்டும். எம்ஜிஆர்தான் தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. அவர் முதலமைச்சராகிவிட்டார். அதனையடுத்து விஜயகாந்த். எதிர்க்கட்சி தலைவராக ஆனார். அவரும் ஆக்ஷன் ஹீரோ. இப்போது விஜய் சி.எம் ஆகியிருக்கிறார். அவரும் ஆக்ஷன் ஹீரோ. ஒரு நடிகர் நாடாளவதற்கு அவர்கள் ஆக்ஷன் ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
