ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. மலேசியாவில் மாஸ் காண்பிக்கும் விஜய்.. எத்தனை கார் பாதுகாப்புக்குனு பாருங்க

சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. இதனையொட்டி விஜய் உட்பட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் நேற்றே அங்கு சென்றுவிட்டார்கள். மலேசியாவில் இறங்கிய விஜய்யை அந்த நாட்டு சிறுவர்கள் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றார்கள். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். கேவிஎன் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. அரசியல் பிரவேசம் செய்திருப்பதால் இதுதான் விஜய்யுடைய கடைசி படம் என்றும் சொல்லப்பட்டிருப்பதால்; இதனை கொண்டாடுவதற்கு விஜய் ரசிகர்கள் முழு வீச்சில் தயாராகியிருக்கிறார்கள்.

இசை வெளியீட்டு விழா: விஜய்யின் படங்களுக்கு எவ்வளவு ஹைப் இருக்கிறதோ அதேபோல் அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கும் இருக்கும். இந்த முறை தமிழ்நாட்டில் நடத்தினால் தேவையில்லாத பிரச்னைகள் ஏதேனும் வருமோ என்று நினைத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள். இன்று அந்த விழா கோலாகலமாக நடக்கிறது.

Vijay s Jana Nayagan Audio Launch to Take Place in Kuala Lumpur Grand Welcome and Trending Video Go Viral
Photo Credit:

பிரபலங்கள் ஆஜர்: இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று விஜய் தனி விமானம் மூலம் தனது தாய், உறவினர்களுடன் மலேசியாவுக்கு சென்றடைந்தார். அவருக்கு பாரம்பரிய நடனம் ஆடி மலேசிய சிறுவர்கள் தங்கள் வரவேற்பை கொடுத்தார்கள். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், பிரபுதேவா என பலர் சென்றிருக்கிறார்கள். பிரபலங்கள் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் விமானம் பிடித்து மலேசியாவுக்கு சென்று விஜய்யை ரசிக்கவிருக்கிறார்கள்.

தளபதி கச்சேரி: இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்துகிறார்கள். எனவே அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, க்ரிஷ், ஹரிசரண், திப்பு என பல பின்னணி பாடகர்களும், பாடகிகளும் விஜய் நடித்த படங்களிலிருந்து பாடல்களை மேடைகளில் பாடவிருக்கிறார்கள். அதற்கான ஒத்திகை பணிகளையும் நேற்றிலிருந்து தொடங்கிவிட்டார்கள். கண்டிப்பாக விழா களைகட்டும் என்பது மட்டும் உறுதி.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது விமான நிலையத்திலிருந்து தான் தங்கியிருக்கும் இடத்துக்கு விஜய் சென்றபோது அவர் சென்ற காருக்கு முன்னும், பின்னும் மொத்தமாக எட்டு கார்கள் பாதுகாப்பாக சென்றன. அனைத்து கார்களுமே ரோல்ஸ் ராய்ஸ் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் கான்வாயை பார்த்த மலேசிய வாழ் ரசிகர்கள் அவருக்கு கைகளை காண்பிக்க; அவரும் பதிலுக்கு கைகளை காண்பித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை பார்க்கும்போது மொத்த மலேசியாவும் அவருடையதுதான் என்பது மாதிரி இருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X