4 வருடங்களாக கஷ்டத்தில் ஜேசன் சஞ்சய்?.. அப்பாவா மகனுக்கு விஜய் எதுவும் செய்யல.. எக்ஸ் மேனேஜர் ஓபன்

சென்னை: தேர்தலில் களமிறங்கும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார் விஜய். அவர் பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். தோல்வி பயத்தால்தான் அவர் இரண்டு தொகுதிகளில் களமிறங்கியிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர்; இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி கிளப்புவதாக இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய். இன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கலை முடித்த பிறகு பரப்புரையிலும் ஈடுபட்டார். வழக்கம்போல் டெம்ப்ளேட்டாக பேசிவிட்டு சென்றுவிட்டார். இதற்கிடையே விஜய் மீது அவரது மனைவி சங்கீதா வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் இந்தத் தேர்தலில் விஜய்க்கு என்ன மாதிரியான பின்னடவை ஏற்படுத்தப்போகிறதோ என்ற பயமும் தவெகவினரிடம் இருக்கிறது. இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

Vijay Jason Sanjay Rift Ex-Manager s Comments Go Viral Amid Election Campaign
Photo Credit:

மகனின் மன நிலைமை: சங்கீதா வைத்த குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் இருக்க; இன்னொரு பக்கம் விஜய்யின் பிள்ளைகளை வைத்தும் அவரை சரமாரியாக விமர்சிக்கிறார்கள் விஜய்யின் எதிர் முகாமை சேர்ந்தவர்கள். சில வருடங்களுக்கு முன்பு மகள் சாஷா லண்டனில் பட்டம் வாங்கியபோது அங்கே செல்லவிலலி விஜய். அதேபோல் தனது மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதாக அறிவிப்பு வந்தபோதுகூட நேரில் செல்லவில்லை. சரி நேரில்தான் செல்லவில்லை; வாழ்த்து தெரிவிப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

கடும் வருத்தத்தில் மகன்?: விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரத்தில் ஜேசன் சஞ்சய் ரொம்பவே கோபத்திலும், வருத்தத்திலும் விஜய் மீது இருப்பதாக கூறப்படுகிறது. தனது முழு ஆதரவை அம்மாவுக்கு கொடுத்திருப்பதாகவும்; அதன் காரணமாகத்தான் தான் இயக்கும் சிக்மா படத்தில் தனது பெயருக்கு முன்னால் இனிஷியலுக்குகூட அப்பா விஜய்யின் பெயரை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் விஜய்யையும் சஞ்சய் அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது நினைவுகூரத்தக்கது.

Also Read
வேட்புமனு தாக்கல் செய்த விஜய்.. காண்டாகி முறைத்த தேர்தல் அதிகாரி?.. என்னங்க புதுசு புதுசா கிளம்புது
வேட்புமனு தாக்கல் செய்த விஜய்.. காண்டாகி முறைத்த தேர்தல் அதிகாரி?.. என்னங்க புதுசு புதுசா கிளம்புது

பி.டி.செல்வக்குமார் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் ஆரம்ப காலத்திலிருந்து சில வருடங்கள் முன்புவரை அவருக்கு மேனேஜராக இருந்த பி.டி.செல்வக்குமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் எடுக்க ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. அவரை அழைத்து என்ன பிரச்னை என கேட்டுவிட்டு உதவி செய்திருக்கலாம். அப்படி செய்தால்தான் என்ன?.. தனது பிள்ளை தானாக வளரட்டும் என எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் நினைத்திருந்தால் இந்நேரம் விஜய்யால் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியுமா?" என்றார்.

சிக்மா அப்டேட்: முன்னதாக, லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கிவருகிறார். அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ராஜு சுந்தரம் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கடந்த வருடத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அநேகமாக இந்த வருடத்துக்குள் சிக்மா திரைப்படம் வெளியாகிவிடும் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X