கரூர் துயர சம்பவம்.. செம டென்ஷனாகி ஹெச்.வினோத் எடுத்த முடிவு?.. சாந்தப்படுத்திய விஜய்?.. இதுவேறயா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த விஜய்; ஆரம்பத்தில் மக்களை சந்திக்காமல் பனையூர் அலுவலகத்தில் இருந்துகொண்டே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்கள் வந்தன. இதனையடுத்து தமிழ்நாடு முழுவது, 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். அந்தவகையில் கரூருக்கும் சென்றார். ஆனால் அவரது ஏழு மணி நேர தாமத வருகை மொத்தம் 41 உயிர்களை கொன்றது. இதுதொடர்பாக சிபிஐயும் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது.

அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய்; கட்சி ஆரம்பித்த புதிதில் வெளியே எங்கும் செல்லாமல் பனையூரில் இருந்தபடியே அனைத்தையும் செய்துகொண்டிருந்தார். தலைவர்களின் நினைவு நாளுக்கு கூட தனது அலுவலகத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கு மட்டுமே மாலையிட்டு மரியாதை செலுத்திவந்தார். இதன் காரணமாக அவர் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியலை விஜய் செய்கிறார் என எதிர் தரப்பில் இருப்பவர்கள் கடுமையாக ட்ரோல் செய்தார்கள். அதனையடுத்து உங்கள் விஜய் நா வரேன் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.

Vijay Karur Tragedy Row Central Bureau of Investigation Probe Expands H Vinoth Link Discussed
Photo Credit:

கரூர் துயர சம்பவம்: அந்தவகையில் கடந்த வருடம் கரூருக்கு சென்று மக்களை சந்தித்தார். ஆனால் வருவதாக சொன்ன நேரத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதமாக பிரசாரம் நடக்கும் இடத்துக்கு வந்தடைந்தார். ஏற்கனவே கட்டுக்கடங்காத கூட்டம்; விஜய்யை பார்த்ததும் மேற்கொண்டு நெருக்கடிக்கு உள்ளானது. இதன் காரணமாக மொத்தம் 41 பேர் உயிரிழந்தார்கள். ஆனால் விஜய்யோ இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததாக தெரிந்த பிறகும்; சம்பவ இடத்தில் இல்லாமல் உடனடியாக விமானத்தை பிடித்து சென்னைக்கு பறந்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரை குறி வைத்து வீடியோவையும் போட்டார்.

Also Read
கட்டிப்பிடித்து ஜாலியாக இருக்கும் திரிஷா.. போஸ்லாம் சூப்பரா இருக்கே.. மேடம் இப்படி ஜாலியா இருக்காங்களே
கட்டிப்பிடித்து ஜாலியாக இருக்கும் திரிஷா.. போஸ்லாம் சூப்பரா இருக்கே.. மேடம் இப்படி ஜாலியா இருக்காங்களே

சிபிஐ விசாரணை: அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்து ட்ரோல்களை சம்பாதித்துக்கொண்டார். இது ஒருபக்கம் இருக்க இந்தப் பிரச்னை தொடர்பான விசாரணை சிபிஐயிடம் சென்றது. அதனையடுத்து விஜய்யை நேரில் அழைத்து மொத்தம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விசாரணையை மேற்கொண்டது. சமீபத்தில்கூட டெல்லிக்கு சென்று அந்த விசாரணையில் பங்கேற்றதும்; அலுவலகத்திலிருந்து வெளியே வந்தது காருக்கு மேலே தலையை காண்பித்து பிரசாரம் செய்யும் தொனியில் விஜய் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

கரூரில் ஷூட்டிங்கா?: முக்கியமாக கடந்த விசாரணையின்போது, கரூர் கூட்டம் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தினார்களாம். அதுமட்டுமின்றி அதற்கான சில ஆதாரங்களையும் அவர்கள் விஜய்யிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த் விஷயம் பூதாகரம் ஆக தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே கரூர் கூட்டத்தின்போது விஜய்யின் பேருந்தில் ஜனநாயகன் இயக்குநர் ஹெச்.வினோத் இருந்தார் என்று பேச்சுக்கள் கிளம்பின.

கடுப்பான வினோத்?: இப்போது இவ்விஷயம் பேசுபொருளாகியிருக்கும் சூழலில் வினோத்தை பிடித்து விசாரிக்க வேண்டும் என்றும் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் துயர சம்பவத்தில் தனது பெயர் இழுக்கப்படுவதை விரும்பாத வினோத், இதுதொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட தயாரானாராம். விஜய்யிடம் அதற்கான அனுமதியை கேட்டபோது, நீங்கள் பொதுவானவர். இது அரசியல். இதற்குள் நீங்கள் வரவேண்டாம் என சாந்தப்படுத்தியதாகவும்; அதற்கு பிறகுதான் அறிக்கை வெளியிடும் முடிவிலிருந்து வினோத் பின்வாங்கியதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X