Vijay: கருநீலச் சட்டை, கிரே ஜீன்ஸ்.. மலேசியா புறப்பட்டார் விஜய்.. சென்னை விமானத்தில் செம கெத்து!

சென்னை: மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜலீல் ஓபன் ஸ்டேடியத்தில் நாளை பிரம்மாண்டமாக ஜன நாயகன் படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் தளபதி கச்சேரி உள்ளிட்டவை நடைபெற உள்ள நிலையில், அதில், பங்கேற்க நடிகரும் தவெக தலைவருமான விஜய் புறப்பட்டுச் சென்ற காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்ற போது செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்தவாறு விஜய் புறப்பட்டுச் சென்றார்.

Vijay kick off to Malaysia for Jana Nayagan Grand Audio Launch and Thalapathy Kacheri

முன்னதாக இயக்குநர் நெல்சன் மலேசியாவுக்குச் சென்ற காட்சிகளை தவெகவை சேர்ந்த ஈசிஆர் சரவணன் வெளியிட்ட வீடியோ மூலம் ரசிகர்கள் அறிந்துக் கொண்டனர்.

கருநீலச் சட்டை, கிரே ஜீன்ஸ்: நடிகராக விஜய்யின் கடைசி படமாகவும் ஆடியோ லான்ச்சாகவும் ஜன நாயகன் இருக்கப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த நிலையில், நடிகர் விஜய் அரசியலில் அதிகமாக இந்த ஆண்டு முழுவதும் தனது ஃபோகஸை செய்து வருகிறார். மாநாடுகள், மக்கள் சந்திப்பு என விஜய் தொடர்ந்து மக்களை சந்தித்து வரும் நிலையில், தனது ரசிகர்களுக்கான ஒன் லாஸ்ட் டைம் சந்திப்பாக இந்த ஜன நாயகன் ஆடியோ லான்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கருநீலச் சட்டை மற்றும் கிரே ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு நரைத்த தாடியுடன் ஷேவ் பண்ணாமல் தவெக தலைவராக வலம் வரும் லுக்கிலேயே விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

குட்டிக் கதை கேட்க ரெடியா?: இந்த ஆண்டு விஜய் ஜன நாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் என்ன குட்டிக் கதை சொல்லப் போகிறார் என்பதை நேரில் பார்க்க ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் சென்னையில் இருந்து மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஒரு விமானம் முழுக்கவே தளபதி ரசிகர்கள் டீமாக பிளான் பண்ணாமல் தனியாக புக் செய்தே தளபதி டூராக மாற்றியுள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில், நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஜோசப் மன்னனாக மாறிய கதையை விஜய் சொல்லியிருந்தார். ஜன நாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நேரடியாக அரசியல் பேசவில்லை என்றாலும், எப்படியாவது மறைமுகமாக மக்களுக்கான மெசேஜ் சொல்லுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

படையெடுக்கும் பிரபலங்கள்: விழா நாயகனான ராக்ஸ்டார் அனிருத், தளபதி கச்சேரியில் பாடல்களை பாடி ரசிகர்களை வைப் ஆக்கப் போகும் எஸ்.பி.பி. சரண், கிருஷ், ஆண்ட்ரியா மற்றும் ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலரும் மலேசியாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X