தலீவர் நவ்.. அய்யோ எரியுதடி மாலா.. காலம் பார்த்து அட்டாக் செய்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: விஜய்க்கு எதிராக திமுகவை ஆதரித்து அரசியல் பேசியவர்கள் நிலைமை எல்லாம் இப்போ ரொம்பவே மோசமாக ஆகியிருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ட்ரோல் பண்ண "தலீவர் நவ்" என டைம் பார்த்து அடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கூத்தாடியை நம்பி நாட்டைக் கொடுக்கலாமா? என்றும் தவெகவை ஆதரித்தால் தற்குறிகள் என்றும் மக்களை இழிவாக பேசிய நிலையில் தான் மக்கள் கடுப்பாகி தவெகவுக்கு ஓட்டுப் போட்டுள்ளதாக கூறுகின்றனர். போதைப் பொருள் புழக்கம், சிறு பிள்ளைகளுக்கும் பாலியல் தொல்லை என திமுக ஆட்சி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிந்தன.

Vijay leading Blue Sattai Maran attack Rajinikanth with a Vadivelu Meme

தேர்தலுக்கு முன்பாக மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையிலும், பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்த நிலையிலும், விஜய் சொன்னது போல ஓட்டுக்கு காசு வாங்கிட்டு மக்கள் விஜய்க்கு ஓட்டுப் போட்டுவிட்டார்கள் எனக் கூறுகின்றனர்.

சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மோசமான பேச்சு: விஜய்க்கு எதிராக ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மோசமாக பேசினர். அதிலும் குறிப்பாக சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் விஜய்க்கு எதிராக திமுகவை ஆதரித்து மோசமாக பேசியது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. போஸ் வெங்கட், வினோதினி, பிக் பாஸ் ஜூலி, சாட்டை துரைமுருகன் என பலரும் விஜய்யை மட்டுமே அதிகளவில் வசைபாடினர். ஆனால், தற்போது அனைவரும் ஆட்டம் கண்டு இருப்பதாக தவெகவினர் பங்கம் பண்ணி வருகின்றனர்.

தலீவர் நவ்: "காலம் பேசாது ஆனால், காத்திருந்து பதில் சொல்லும்" என ரஜினிகாந்த் போட்ட போஸ்ட் விஜய்க்கு எதிராகத்தான் என பரப்ப்பட்டது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் அதிக 103க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருவதை பார்த்தால் "தலீவர் நவ்" என எரியுதடி மாலா மீம் டெம்ப்ளேட்டை போட்டு சரியான டைமிங்கில் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்தை கலாய்த்துள்ளார்.

ஆட்சியை பிடிப்பாரா விஜய்?: தொடர்ந்து விஜய் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தவெக ஆட்சியமைக்கும் என்கின்றனர். குறைந்தபட்சம் 15 சுற்றுகளுக்கு பின்னர் தான் முழுமையான ரிசல்ட் தெரிய வரும் என்கின்றனர். தொடர்ந்து தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மக்களும் பிரபலங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X