மக்கள் காசை தொடமாட்டேன்னு ஸ்டாலின் சொல்வாரா?.. குழந்தையை தோளில் தூக்கி வைத்து விஜய் செம சம்பவம்!
சென்னை: 5 வருஷத்துக்கு ஒரு தடவை வருகிற தேர்தல் இதுவல்ல என்றும் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் போல இந்த தேர்தல் இருக்கப் போகிறது என்றும் மக்கள் இப்போதே மாற்றத்தை எதிர்பார்ப்பதால் தான் திமுக பயந்துக் கொண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது என்றும் மக்கள் காசுல ஒரு பைசா இந்த விஜய் தொடமாட்டான். இதே போல இப்போ ஆளுகின்ற கட்சியும், இதற்கு முன்பாக ஆண்ட கட்சியினரும் சொல்ல முடியுமா என விஜய் ஆவேசமாக பேசியது வைரலாகி வருகிறது.
மேலும், திருநெல்வேலியில் விஜய்யை வழிநெடுக மக்கள் சாலைகளில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போது சிறுவன் ஒருவனை தனது வேனில் ஏற்றியது மட்டுமின்றி அவனை தோளிலும் தூக்கி வைத்து தளபதி விஜய் கொஞ்சிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் ரொம்பவே ஓபன் அப் ஆகிவிட்டார் என்றும் இப்படி இறங்கி அரசியல் செய்வார் விஜய் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என ரசிகர்களே கமெண்ட் போட்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக சொல்லுமா?: சொத்து விவரத்தில் கூட தங்களிடம் போதிய பணமே கையிருப்பில் இல்லை என மு.க. ஸ்டாலின் நாமினேஷன் தாக்கலின் போது தெரிவித்தது ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது. விஜய்யின் சொத்து மதிப்பு வெளியான பின்னர் திமுகவினர் கிண்டல் செய்ததை விட அதிகளவு தவெகவினர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், திருநெல்வேலியில் மக்களை சந்தித்துப் பேசிய விஜய் "மக்கள் காசை தொடமாட்டேன்னு ஆளும் கட்சியும் நம்மை ஆண்ட கட்சியும் சொல்லுமா? என நேரடியாக மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்யும் விதமாக பேசியுள்ளார்.
குழந்தையை தோளில் தூக்கி வைத்து: விஜய் திருநெல்வேலிக்கு வருகைத் தந்த போது அவரை பார்க்க சிறுவன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த சிறுவனை தனது வேனில் ஏற்றிக் கொண்ட விஜய் அத்துடன் நிற்காமல் தனது தோளில் உட்கார வைத்து அழகு பார்த்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. சிறுவர்கள் ஏற்கனவே தங்கள் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளை கூட விடாமல் இந்த முறை விஜய்க்கு ஓட்டுப் போடச் சொல்லி கேட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த குழந்தைகளை மீண்டும் அரசியல் களத்திலும் விஜய் கவர்ந்து வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











