»   »  ரஜினியை போன்று 'மூன்று முகம்' காட்டத் துடிக்கும் விஜய்

ரஜினியை போன்று 'மூன்று முகம்' காட்டத் துடிக்கும் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் துடிக்கிறாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பில் மிரட்டியிருந்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் அவரது மருமகன் தனுஷ் நடித்தார். ரஜினி நடித்த மாப்பிள்ளையோடு ஒப்பிட்டுப்பார்த்த மக்களுக்கு தனுஷின் மாப்பிள்ளை படம் பிடிக்காமல் போய்விட்டது.

தனுஷ் தனது மாமனாரின் படமான பொல்லாதவனின் தலைப்பை தனது படத்திற்கு பயன்படுத்தினார்.

விஷால்

விஷால்

நான் சிவப்பு மனிதன், பாயும் புலி ஆகிய ரஜினியின் படங்களின் பெயர்களை விஷால் தனது படங்களுக்கு வைத்துள்ளார். நான் சிவப்பு மனிதன் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் அவர் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார்.

அஜீத்

அஜீத்

சூப்பர் ஸ்டார் சூப்பராக நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். அஜீத்தின் பில்லா படம் மக்களை கவர்ந்தது. ஆனால் பில்லா 2 படம் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பியது.

விஜய்

விஜய்

ரஜினி நடித்த தங்க மகன் தலைப்பை வாங்கி தனது படத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது விஜய்யின் பல நாள் ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே மாட்டேன் என்கிறது.

மூன்று முகம்

மூன்று முகம்

ரஜினிகாந்த் அலெக்ஸ் பாண்டியன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடித்துவிட முடிவு செய்துள்ளாராம் விஜய். இதன் மூலம் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முகம் காட்ட விரும்புகிறார் விஜய்.

English summary
Vijay is reportedly longing to act in the remake of Rajinikanth's Moondru Mugam.
Please Wait while comments are loading...