ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த விஜய்.. பிறந்தநாள் அன்று அதிரடி அறிவிப்புக்கு பிளானா?
சென்னை : விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் வேகமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே, விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
விஜய் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது ரசிகர்களை வரவழைத்துச் சந்திப்பது வழக்கம். விஜய்யோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

இன்று 'விஜய் 62' ஷூட்டிங் இல்லாமல் ஓய்வில் இருக்கிறார் விஜய். இதனால், ரசிகர்களைச் சந்திப்பதற்காக விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வரவிருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய்யை பார்ப்பதற்காக விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் குவிந்திருந்த கேரள மாநில ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் விஜய். மேலும், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுவரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











