வீராசாமியைத் தொடர்ந்து.... மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கும் டிஆர்
சென்னை: தான் ஹீரோவாக நடித்த வீராசாமி படத்தின் மூலம் பலருக்கும் 'டப்' கொடுத்த நடிகர் டி.ராஜேந்தர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் அடுத்ததாக கோலி சோடா போன்று கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறாராம்.

பெரிய பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் கைகொடுக்காத நிலையில் மீண்டும் தனது ஸ்டைலிலேயே ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான திரைக்கதையை விஜய் மில்டன் எழுதியிருக்கிறார்.
மேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அதற்கான முயற்சிகளில் தற்போது விஜய் மில்டன் இறங்கி இருக்கிறாராம்.
விரைவில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications