விஜய் நடிக்க மறுத்து 'சூப்பர் ஹிட்'டான படங்கள்
சென்னை: இளைய தளபதி விஜய் நடிக்க மறுத்த படங்களில் வேறு நடிகர்கள் நடித்து அவை அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு இந்த வாய்ப்புகளை கை நழுவவிட்டதை நினைத்து விஜய் வருத்தப்பட்டார்.
விஜய் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பிரெண்ட்ஸ், குஷி, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் சில படங்களில் நடிக்க முடியாமல் போனது. மேலும் சில படங்களின் கதை பிடிக்காததால் அதில் நடிக்க மறுத்துள்ளார்.
சில நேரங்களில் பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் கால்ஷீட் பிரச்சனையால் அதை தவிர்க்க வேண்டி சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தான் நடிக்க மறுத்த படங்கள் ஹிட்டானதைப் பார்த்து அடடா நல்ல வாய்ப்பை இப்படி விட்டுவிட்டோமே என்று அவர் வருத்தப்பட்டதும் உண்டு.
அவ்வாறு விஜய் நடிக்க மறுத்து ஹிட்டான சில படங்களைப் பார்ப்போம்.

முதல்வன் வாய்ப்பை தவறவிட்ட விஜய்
ரஜினிகாந்துக்காக எழுதப்பட்டது முதல்வன் படத்தின் கதை. அதில் ரஜினி நடிக்க முடியாமல் போனதையடுத்து அந்த வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அதில் நடிக்க முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு ஷங்கர் அந்த படத்தை அர்ஜுனை வைத்து எடுத்து ரிலீஸ் செய்தார்.

உன்னை நினைத்து
விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா, லைலா நடித்த சூப்பர் ஹிட் படம் உன்னை நினைத்து. இதில் நடிக்க விஜயைத் தான் முதலில் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுக்கவே சூர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தூள்
விக்ரம், ஜோதிகா, ரீமா சென் நடித்து கண்டமேனிக்கு ஓடிய படம் தூள். இந்த படத்தில் நடிக்குமாறு இயக்குனர் தரணி விஜயிடம் தான் முதலில் சென்றுள்ளார். கதை பிடிக்காமல் விஜய் மறுத்த பிறகே விக்ரம் நடித்துள்ளார்.

ஆட்டோகிராப்
சேரன் தானே இயக்கி ஹீரோவாக நடித்த படம் ஆட்டோகிராப். படமும் சரி, பாடல்களும் சரி சூப்பர் ஹிட்டானது. தனது ஆட்டோகிராபில் நடிக்குமாறு சேரன் விஜயைத் தான் கேட்டுள்ளார். ஆனால் அவர் வருடக் கணக்கில் கால்ஷீட் கேட்டதால் விஜய் நடிக்க மறுத்துவிட்டார்.

விஜய் மறுத்த 4 படங்களுமே சூப்பர் ஹிட்
விஜய் நடிக்க மறுத்த முதல்வன், உன்னை நினைத்து, தூள் மற்றும் ஆட்டோகிராப் ஆகிய 4 படங்களுமே சக்கை போடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











