ஹீரோ .. ஹீரோ ..

By Staff

தனது அடுத்த படத்திற்கு ஷங்கரை அணுகியுள்ளாராம் விஜய்.

சமீப காலமாக விஜய்யின் படங்கள் அதிகம் பேசப்படவில்லை. அடுத்தடுத்து தோல்வியையே சந்தித்துள்ளன.அத்தோடு விஜய்யின் இடத்தை விக்ரம் ஆக்கிரமித்துவிட்டார். அடுத்தபடியாக சிம்பு, தனுஷ் என புதிய அலைஅடிக்க ஆரம்பித்திருப்பதால் விஜய் பயந்து போயிருப்பதாக தகவல்.

இப்போது பாலசந்தரின் கவிதாலயா தயாரிக்கும் திருமலை படத்தில் நடித்து வரும் விஜய்க்கு, தனது மார்க்கெட்ஆட்டம் கண்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அடுத்த அடியை மிக எச்சரிக்கையுடன் வைக்கமுடிவு செய்துள்ளாராம்.

இதனால் வழக்கம்போல மலையாள, தெலுங்கில் நன்றாக ஓடிய படங்களின் கதைகளை சுட்டு தமிழில் எடுக்கும்தனது பாணியை விட்டுவிட முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் புதிய டைரக்டர்களை நம்பி களத்தில் இறங்கிய படங்களும் தோல்வியடைந்துவிட்டதால், மிகசேப்டியாக அடுத்த படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய். இதற்காக சமீபத்தில் டைரக்டர் ஷங்கரை அணுகிபேசியுள்ளார்.

தனது அடுத்த படத்தை டைரக்ட் செய்து தருமாறு நேரடியாகவே கேட்டுள்ளாராம். ஆகஸ்ட் 15ல் பாய்ஸ் ரிலீஸ்செய்து விடுகிறேன். அதன் பின் யோசிக்கலாம் என்று பட்டும்படாமல் கூறி அனுப்பிவிட்டாராம் ஷஙகர்.

என்ன தான் படங்கள் அடுத்தடுத்து ஊத்தினாலும் விஜய்யின் சம்பளம் மட்டும் குறையவே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. படத்துக்கு ரூ. 4 கோடி வரை சுளையாக வாங்கிவிடுகிறார். தொடர்ந்து வெற்றிகளைத் தந்துவரும் விக்ரமோ மற்றவர்களைப் போல படத்துக்குப் படம் சம்பளத்தை குண்டக்க மண்டக்க அதிகரிக்க மறுத்துவருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X